தமிழ் செய்திகள்  /  Sports  /  Former Cricketer Ricky Ponting Talks About His Treatment

Ricky Ponting Health Update: ‘தடுமாறி மயங்கினேன்…’ ரிக்கி பாண்டிங் முதல் பேட்டி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 03, 2022 09:58 AM IST

‘எனக்கு நெஞ்சில் வலிகள் இருப்பதை உணர்ந்த, தயாரிப்பாளர் கிறிஸ் ஜோன்ஸ், என் நிலைமையை விசாரித்து, உடனடியாக என்னை அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்’ -ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங் - கோப்பு படம்
ரிக்கி பாண்டிங் - கோப்பு படம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வர்ணனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ரிக்கி பாண்டிங் - கோப்பு படம்
ரிக்கி பாண்டிங் - கோப்பு படம்

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரிக்கி பாண்டிங்குக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தனது உடல் நிலை குறித்து சேனல் 7 தொலைக்காட்சிக்கு அப்பேட் கொடுத்துள்ளார் ரிக்கி பாண்டிங். அதில்,

‘‘நான் நேற்று நிறைய பேரை பயமுறுத்தியிருக்கலாம், எனக்கு அது ஒரு பயங்கரமான தருணமாக இருந்தது. நான் வர்ணனையாளர் பாக்ஸில் அமர்ந்திருந்தேன், என் மார்பில் திடீரென இரண்டு முறை கூர்மையான வலிகள் ஏற்பட்டன. நான் அதை தவிர்த்து பணியை தொடர முயற்சித்தேன். நான் நேரலையில் இருந்ததால் என்னால் நீண் நேரம் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. அடுத்தடுத்து இரண்டு முறை என்னால் அந்த வலியை உணர முடிந்தது.

கொஞ்சம் ரிலாக்ஸ் எடுக்கலாம் என கமெண்ட்ரி பாக்ஸ் பின்புறமாக நடந்து செல்ல முயன்றேன். திடீரென தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த மேஜையை பிடித்து தாங்கிக் கொண்டேன். அப்போது வெளியே வந்த ஜஸ்டின் லாங்கரிடம் என்னுடைய உடல்நிலை குறித்து தெரிவித்தேன்.

எனக்கு நெஞ்சில் வலிகள் இருப்பதை உணர்ந்த, தயாரிப்பாளர் கிறிஸ் ஜோன்ஸ், என் நிலைமையை விசாரித்து, உடனடியாக என்னை அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அடுத்த 10 அல்லது 15 நிமிடங்களில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மருத்துவமனையில் எனக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று காலை நான் நன்றாக உணர்கிறேன். இன்று காலை நான் பளபளப்பாகவும் புதியதாகவும் இருக்கிறேன்,’’

என்று தனது உடல் நிலை குறித்த தகவல்களை ரிக்கி பாண்டிங் பகிர்ந்துள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்