Tamil News  /  Sports  /  Fifa Worldcup 2022:when Is The Opening Ceremony
பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தொடக்க விழா ஏற்பாடுகள்
பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தொடக்க விழா ஏற்பாடுகள்

FIFA WorldCup 2022: பிபா உலகக்கோப்பை போட்டி தொடக்கவிழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்

19 November 2022, 23:47 ISTI Jayachandran
19 November 2022, 23:47 IST

2022ஆம் ஆண்டுக்கான பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் நவம்பர் 20ஆம் தேதி தொடங்குகிறது.

நவம்பர் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இந்த உலகக் கோப்பை தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்குத் தொடங்குகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

போட்டியின் முதல் ஆட்டம் குரூப் ஏயில் உள்ள கத்தாருக்கும் ஈக்குவேடார் நாடுகளுக்கும் இடையே நடக்கிறது.

முன்னதாக திங்கள்கிழமையன்று கத்தாரின் முதல் ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. இது போட்டியின் தொடக்க விழாவுக்குப் பின் திட்டமிடப்பட்டிருந்தது.

போட்டியை கத்தார் நாடு நடத்துவதால் இரு பெரும் நிகழ்ச்சிகள்

ஏற்பாடு செய்வதில் சிரமங்கள் என அதிகாரிகள் கருதியதால் திங்கள்கிழமை நடைபெறவிருந்த கத்தாரின் ஆட்டத்தை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றினர்

ஈக்குவேடர் நாட்டு அதிபர் கில்லர்மோ லாஸோ தனது நாட்டு அணியின் முதல் ஆட்டத்தைப் பார்க்க வரப்போவதில்லை என்று கூறியுள்ளார். உள்நாட்டுப் பிரச்னைகள் தொடர்பாக அவர் கலந்து கொள்ளவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிபா உலகக் கோப்பை கால்பந்து 2022 போட்டியின் தொடக்க விழா கத்தார் நாட்டில் உள்ள அல் பாய்த் ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கிறது. இது தோஹா நகரின் வடக்கே 40 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

வளைகுடா நாட்டின் நாடோடிகள் பயன்படுத்திய கூடாரத்தின் பெயர் சூட்டப்பட்ட அல் பாய்த் ஸ்டேடியம் சுமார் 60 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டது. மத்திய தோஹா நகரத்தில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளது.

அல்பாய்த் மைதானத்தில் மேற்பகுதியை மூடுவதற்கு பிரமாண்டமான சுருங்கி விரியக்கூடிய மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான அம்சமாகும்.

தொடக்க நாள் நிகழ்ச்சியில் தென்கொரியாவில் பிரபலமான பிடிஎஸ் இசைக்குழுவின் 7 உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிடிஎஸ் இசைக்குழுவுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பதால் இந்த இசை நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இசை நிகழ்ச்சியின் தீம், டீரீம்மர்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பிடிஎஸ் இசைக்குழுவைத் தொடர்ந்து பிரபலங்களான பிளாக் ஐடு பீஸ், ராபி வில்லியம்ஸ், நோரா ஃபதேஹி உள்ளிட்டோர் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்துவர்.

இதனிடையே தொடக்க நாள் நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்கு ஷகீரா உள்பட பல பிரபலங்கள் அணுகப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபல மேற்கத்திய பாடகர் ராட் ஸ்டூவர்ட் தனக்கு ஒரு மில்லியன் டாலர் தருவதாகக் கூறி அங்கு வந்து பாடுமாறு வந்த அழைப்பைத் தான் மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.