FIFA worldcup 2022:காயத்தால் அடுத்த 2 போட்டிகளில் பிரேசில் வீரர் நெய்மார் விலகல்
கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரேசில் நாட்டு நட்சத்திர வீரர் நெய்மாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

செர்பியாவுக்கு எதிரான போட்டியில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வலியால் துடித்த பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார்
பிபா உலகக் கோப்பை தொடர் தொடங்கு ஒரு வாரம் ஆகியிருக்கும் நிலையில், சிறிய அணிகளில் எழுச்சி, பெரிய அணிகளில் வீழ்ச்சி என சுவாரஸ்யங்களுடன் சென்றுள்ளது.
டாப் அணிகள் அனைத்தும் ஒரு போட்டி விளையாடிவிட்ட நிலையில், அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகள் தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
அதேபோல் நட்சத்திர வீரர்கள் சிலரும் இன்னும் சொல்லிக்கொள்ளும் விதமாக ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் உள்ளனர். இதையடுத்து பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மாருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
