Paul Pogba: ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வி! பிரான்ஸ் கால்பந்து வீரர் போக்பா விளையாட தடை
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Paul Pogba: ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வி! பிரான்ஸ் கால்பந்து வீரர் போக்பா விளையாட தடை

Paul Pogba: ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வி! பிரான்ஸ் கால்பந்து வீரர் போக்பா விளையாட தடை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Sep 12, 2023 06:03 PM IST

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முன்னிணி கால்பந்து வீரரான பால் போக்பா ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ளார். டெஸ்டோஸ்டிரோன் என தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை அவர் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊக்கமருந்து பயன்படுத்தியதாக பிரான்ஸ் கால்பந்து வீரர் போக்பாவுக்கு தடை
ஊக்கமருந்து பயன்படுத்தியதாக பிரான்ஸ் கால்பந்து வீரர் போக்பாவுக்கு தடை (REUTERS)

இதன் காரணமாக தற்போது அவர் விளையாடி வரும் ஜூவ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். போக்பாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்க அவருக்கு செப்டம்பர் 16ஆம் தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

30 வயதாகும் போக்பா மீதான இந்த குற்றச்சாட்டு உறுதியானால், இரண்டு ஆண்டுகள் வரை அவர் கால்பந்து விளையாட தடை விதிகப்படலாம். 2018ஆம் ஆண்டில் உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணியில் முக்கிய வீரராக இருந்தவர் போக்பா.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9