Tamil News  /  Sports  /  Fifa World Cup Start On Today At Qatar
பிபா உலகக்கோப்பை  2022 (REUTERS)
பிபா உலகக்கோப்பை 2022 (REUTERS)

FIFA World Cup 2022: பிபா உலகக்கோப்பை திருவிழா கத்தாரில் இன்று தொடங்குகிறது

20 November 2022, 11:09 ISTKarthikeyan S
20 November 2022, 11:09 IST

2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் இன்று (நவ.20) கோலாகலமாக தொடங்குகிறது. இரவு 9.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் கத்தார் – ஈக்வேடார் அணிகள் மோதுகின்றன.

கால்பந்து ரசிகர்களின் திருவிழாவாக கருதப்படும் பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது தொடர் இன்று கோலாகமாக தொடங்குகிறது. இந்த உலகக்கோப்பை தொடரை கத்தார் நாடு நடத்துகிறது. இதன் மூலம் வரலாற்றில் முதன் முறையாக உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் முதல் அரேபிய நாடு என்ற வரலாற்று பெருமையை கத்தார் பெறுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

கால்பந்து திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு அல்பேத் மைதானத்தில் கோலாகமாக நடைபெறுகிறது. போட்டியையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன. இதைத் தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தார் – ஈக்வேடார் அணிகள் மோதுகின்றன.

உலகின் 32 அணிகள் கலந்துகொள்ள உள்ள இந்த தொடர் டிசம்பர் 18ஆம் தேதி வரை அடுத்த 29 நாட்களுக்கு உற்சாகமாக நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்கும் அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

பங்கேற்கும் நாடுகள்:

குரூப் 'ஏ'

  • கத்தார்
  • ஈக்வடார்
  • செனகல்
  • நெதர்லாந்து

குரூப் 'பி'

  • இங்கிலாந்து
  • ஈரான்
  • அமெரிக்கா
  • வேல்ஸ்

குரூப் 'சி'

  • அர்ஜெண்டினா
  • சவுதி அரேபியா
  • மெக்சிகோ
  • போலந்து

குரூப் 'டி'

  • பிரான்ஸ்
  • ஆஸ்திரேலியா
  • டென்மார்க்
  • துனிஷியா

குரூப் 'இ'

  • ஸ்பெயின்
  • கோஸ்டா ரிகா
  • ஜெர்மனி
  • ஜப்பான்

குரூப் ‘எஃப்’

  • பெல்ஜியம்
  • கனடா
  • மொராக்கோ
  • குரோஷியா

குரூப் ‘ஜி’

  • பிரேசில்
  • செர்பியா
  • சுவிட்சர்லாந்து
  • கேமரூன்

குரூப் ‘ஹெச்’

  • போர்ச்சுகல்
  • கானா
  • உருகுவே
  • தென் கொரியா

 

 

டாபிக்ஸ்