Tamil News  /  Sports  /  Fifa World Cup Organizers To Ban Alcoholic Beer Sales At Stadiums: Report
உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும் மைதானங்களில் பீர் விற்பனைக்கு தடை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும் மைதானங்களில் பீர் விற்பனைக்கு தடை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

FIFA world cup 2022: பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு...ஆண்களுக்கு பீர் தட்டுப்பாடு?

18 November 2022, 23:09 ISTMuthu Vinayagam Kosalairaman
18 November 2022, 23:09 IST

உலகக் கோப்பை நடைபெறும் எட்டு மைதானங்களில் ஆல்கஹால் கலந்த பீர் விற்பனைக்கு அனுமதி கிடையாது என போட்டி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

22வது உலகக் கோப்பை காலபந்த தொடர் மத்திய கிழக்கு நாடான கத்தாரில் நடைபெறவுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் போட்டி கத்தார் - ஈக்வேடார் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. போட்டி தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், கால்பந்து போட்டிகள் நடைபெறும் 8 மைதானங்களிலும் ஆல்கஹால் கலந்த பீர் விற்பனைக்கு தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

அதேவேளையில் ஆல்கஹால் கலப்படம் இல்லாத பீர், தொடரில் நடைபெறும் 64 போட்டிகளிலும் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக என தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இந்த விவகாரம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், இந்த தகவல் வெளியாகியிருப்பது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாம்பெயின், ஒயின், விஸ்கி உள்பட பிற மதுபானங்கள் மைதானங்களின் விருந்தோம்பல் பகுதிகளில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இடங்களுக்கு வெளியே, சாதாரண டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு பீர் மட்டுமே விற்கப்படும் என தெரிகிறது.

முன்னதாக, பெண்கள் தங்களது உடல் அங்கங்களை வெளிக்காட்டும் விதமாக கவர்ச்சி ஆடைகளை அணியக்கூடாது என கத்தார் அரசு தெரிவித்திருந்தது. இதனால் கால்பந்து ரசிகைகள் அப்செட் ஆன நிலையில், தற்போது ஆண் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக பீர் விற்பனை தடை குறித்த தகவல் அமைந்துள்ளது.

இந்த முடிவுக்கு பல்வேறு நாட்டு ரசிகர்கள் குழு, கவலை அளிப்பதாகவும், பீர் மறுக்கப்பட்டால் ஆட்டத்தை கொண்டாட்டமாக பார்ப்பதை மிஸ் செய்வோம் எனவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

போட்டி தொடங்குவதற்கு முன்னர் இந்த விவகாரம் தொடர்பாக இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தெரிகறது.

டாபிக்ஸ்