தமிழ் செய்திகள்  /  Sports  /  Fifa World Cup: Fifa Moves World Cup 2022 Start In Qatar Up One Day To November 20

FIFA world cup: ஒரு நாள் முன்னரே தொடக்கம்! முதல் போட்டி கத்தார் vs ஈக்வடார்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 12, 2022 02:17 PM IST

ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் கத்தார் முதல் போட்டியில் பங்கேற்கவுள்ளது.

ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் முதல் போட்டியில் கத்தார் - ஈக்வடார் மோதல்
ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் முதல் போட்டியில் கத்தார் - ஈக்வடார் மோதல் (Reuters)

ட்ரெண்டிங் செய்திகள்

22வது கால்பந்து உலகக் கோப்பை தொடரன் இது நவம்பவர் 21 முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒரு நாள் முன்னதாக நவம்பர் 20ஆம் தேதி நடைபெறும் என ஃபிபா அறிவித்துள்ளது.

32 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில், ஒரு குரூப்பிலும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளில் அணிகளில் மோதுகின்றன. தினமும் நான்கு ஆட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், கத்தார் தலைநகர் தோஹாவை சுற்று 8 புதிய மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தொடரை நடத்தும் கத்தார் அணி முதல் போட்டியை விளையாடும் விதமாக போட்டி முன்கூட்டியே தொடங்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி உலகக்கோப்பை முதல் போட்டியில் கத்தார் - இக்வேடார் அணிகள் மோதுகின்றன.

ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணைபடி நவம்பர் 21ஆம் தேதி, முதல் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - செனகல் அணிகள் விளையாடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே குரூப்பில் போட்டியை நடத்தும் கத்தார், மற்றொரு அணியாக ஈக்வடார் இருக்கிறது. எனவே முதல் போட்டியை இந்த இரண்டு அணிகளுக்கு இடையே முதல் நாளிலேயே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடும் அணிகளின் விவரம்:

குரூப் ஏ - கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து

குரூப் பி - இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

குரூப் சி - அர்ஜெண்டினா, செளதி அரேபியா, போலாந்து, மெக்ஸிகோ

குரூப் டி - பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா,

குரூப் இ - ஸ்பெயின், கோஸ்டாரிக்கா, ஜெர்மனி, ஜப்பான்

குரூப் எஃப் - கனடா, பெல்ஜியம், மொராக்கோ, குரோஷியா

குரூப் ஜி - பிரேசில், செர்பியா, ஸ்விட்சர்லாந்து, கேமரூன்

குரூப் எச் - போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா

WhatsApp channel