Tamil News  /  Sports  /  Fifa World Cup 2022 To Be Held At Eight Venus At Qutar
பிபா உலகக் கோப்பை தொடருக்கு கத்தாரில் உருவாக்கப்பட்ட எட்டு மைதானங்கள்
பிபா உலகக் கோப்பை தொடருக்கு கத்தாரில் உருவாக்கப்பட்ட எட்டு மைதானங்கள்

fifa world cup 2022: எட்டு மைதானங்களில் உலகக் கோப்பை கால்பந்து தொடர்

19 November 2022, 23:42 ISTMuthu Vinayagam Kosalairaman
19 November 2022, 23:42 IST

உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில், போட்டிகள் நடைபெற இருக்கும் மைதானங்களின் பெயர்களை தெரிந்து கொள்ளலாம்.

உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்ற முதல் மத்திய கிழக்கு நாடாக கத்தார் உள்ளது. 22வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் அங்கு நடைபெறவுள்ள நிலையில், கத்தார் நாடே விழா கோலம் பூண்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

நாளை தொடங்கும் கால்பந்து தொடர் டிசம்பர் 18ஆம் தேதி வரை சுமார் ஒரு மாத காலத்துக்கு நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு கத்தாரில் சிறப்பாக எட்டு கால்பந்து மைதானங்கள் உருவாகப்பட்டுள்ளன. அதன்படி கத்தாரி நாட்டின் தோகா, அல்கோர், லுசைல், அல்ரையான், அல்வக்ரா ஆகிய நகரங்களில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அனைத்து மைதானங்களும் தலைநகர் தோகாவிலிருந்து 40 முதல் 50 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. கத்தாரில் ஏற்கனவே ஒரு கால்பந்து மைதானம் இருக்கும் நிலையில் உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு புதுபிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 7 மைதானங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. மைதானங்களை கட்டுவதற்காக மட்டும் ரூ. ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மைதானங்களின் பெயர்களானது, லுசைல் ஐ கானிக், அல் பேத், ஸ்டேடியம் 974, அல் துமாமா, கலீபா சர்வதேச ஸ்டேடியம், எஜூகேசன் சிட்டி ஸ்டேடியம், அகமது பின் அலி ஸ்டேடியம், அல் ஜனாப் ஸ்டேடியம் ஆகியவையாக உள்ளன.

உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி லுசைல் ஐ கானிக் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அதேபோல் கத்தாரில் இருந்த ஒரு கால்பந்து மைதானமான கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் மொத்தம் 8 ஆண்டுகள் நடைபெறவுள்ளன. இந்த மைதானம் 1976-ம் ஆண்டு கட்டப்பட்டது. கத்தார் உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமம் கிடைப்பதற்கு முன்பு அங்கு இருந்த ஒரே மைதானம் இது தற்போது முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்