Fifa world cup 2022:பயிற்சியாளருக்கு ரெட் கார்டு!தென்கொரியா போட்டியில் பரபரப்பு
போட்டி முடிவதற்கு முன்னரே நடுவர் விசில் அடித்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தென் கொரியா அணி பயிற்சியாளருக்கு ரெட் காட்டு காட்டப்பட்டது. இதனால் அவர் அடுத்த போட்டியில் அணியினருடன் அமர முடியாத சூழல் உருவாகியுள்ளது.
பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் எச் பிரிவில் தென்கொரியா - கானா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. அடுத்தடுத்து இரு அணிகளும் கோல் அடிக்க என இந்த ஆட்டம் முழுவதும் பரபரப்பாகவே நடைபெற்றது.
ட்ரெண்டிங் செய்திகள்
ஆட்டத்தின் 24 மற்றும் 34வது நிமிடத்தில் கானா வீரர்கள் முகமது சலிஸ், முகமது குடுஸ் ஆகியோர் கோல் அடித்த முதல் பாதியில் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற வைத்தனர்.
இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடிய தென்கொரிய வீரர்கள் 58, 61வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்த சமன் செய்தனர். இந்த இரண்டு கோல்களையும் தென் கொரிய வீரர் சோ கியூ சங் அடித்தார்.
இதைத்தொடர்ந்து மேலும் ஒரு கோல் முன்னிலை பெறுவதற்கான முயற்சியில் இரு அணிகளும் தீவிரமாக ஈடுபட்டன. இதற்கு கைமேல் பலனால ஆட்டத்தின் 68வது நிமிடத்திலேயே கானா அணிக்கு கோல் கிடைத்தது. இந்த கோலை முகமது குடுஸ் அடித்தார்.
இதன் பின்னர் தென்கொரிய வீரர்கள் எவ்வளவு முயற்சித்தும் கோல் அடிக்க முடியாமல் போனது. ஆட்டத்துக்கு இடையே ஏற்படும் சில நேர விரயங்களை சரி செய்வதற்கு போட்டி நடைபெறும் மொத்த நிமிடமான 90 நமிடங்களுக்கு பிறகு கூடுதலாக சில நிமிடங்கள் விளையாட வாய்ப்பு அளிக்கப்படும்.
இந்த கூடுதல் நேரமானது அந்த போட்டியில் காயம், வீரர்கள் மாறுவது, ப்ரீகிக், பெனால்டி போன்ற சமயங்களில் எடுத்துக்கொள்ளப்பட்ட நேரத்துக்கு ஏற்ப வழங்கப்படும். அந்த வகையில் இந்தப் போட்டியில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டு அது முடிவதற்குள்ளாகவே நடுவர் விசில் அடித்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தென் கொரியா பயிற்சியாளர் பாலோ பென்டோ களத்தினுள் சென்று நடுவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் நடுவர் அவருக்கு சிவப்பு அட்டை காட்டினார். இதன் காரணமாக அவர் அடுத்த போட்டியில் வீரர்களுடன் இணைந்து அமர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
தென்கொரியா தனது அடுத்த போட்டியில் போர்ச்சுகலை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல், அதிக கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.
அதேபோல் கானா அணி அடுத்த போட்டியில் உருகுவே அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலே நாக்அவுட் சுற்று வாய்பை பெறலாம்.