Tamil News  /  Sports  /  Fifa World Cup 2022: Know How Much Prize Money Will Get By Champions And Other Teams
கத்தார் உலகக் கோப்பை தொடரில் அணிகளுக்கு கிடைக்கும் பரிசுத்தொகை அறிவிப்பு
கத்தார் உலகக் கோப்பை தொடரில் அணிகளுக்கு கிடைக்கும் பரிசுத்தொகை அறிவிப்பு

FIFA world cup 2022: கோப்பை வெல்லும் அணி பெறும் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

16 November 2022, 13:15 ISTMuthu Vinayagam Kosalairaman
16 November 2022, 13:15 IST

பிபா கால்பந்து தொடரில் கோப்பையை வெல்லும் அணி பெறப்போகும் பரிசுத் தொகை குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதேபோல் தொடரில் பங்கேற்கும் மொத்த அணிகளும் எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

22வது கால்பந்து உலகக் கோப்பை தொடர் கத்தாரில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த கால்பந்து திருவிழாவில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கின்றன.

ட்ரெண்டிங் செய்திகள்

எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுகளிலும் நான்கு அணிகள் இடம்பெறும் நிலையில், தங்கள் பிரிவில் உள்ள அணிகளுக்கு இடையே ரவுண்ட் ராபின் முறையில் மோதிக்கொண்டு ஒவ்வொரு பிரிவிலும் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.

இதில் வெற்றி பெறும் அணி அடுத்து காலிறுதி, அரையிறுதி என அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று முன்னேறி இறுதிப்போட்டியில் பங்கேற்று கோப்பையை வெல்லும்.

இதையடுத்து உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் கோப்பையை தட்டிச்செல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.342 கோடி பரிசாக கிடைக்கும். இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.244 கோடியும், மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடிக்கும் அணிக்கு முறையே ரூ.219 கோடியும்,ரூ.203 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

அதேபோல் கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ.138 கோடியும், இரண்டாவது சுற்று போட்டிகளான நாக்அவுட் ஆட்டங்களுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.105 கோடியும், லீக் சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.73 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான மொத்த பரிசுத்தொகை ரூ. 3,586 கோடியாக உள்ளது. இது கடந்த முறையை விட ரூ.328 கோடி கூடுதல் தொகையாக உள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரூ.3,258 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

டாபிக்ஸ்