Tamil News  /  Sports  /  Fifa World Cup 2022: Injured France Striker Benzema Out Of The World Cup
காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய பிரான்ஸ் ஸ்டிரைக் வீரர் பென்சிமா
காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய பிரான்ஸ் ஸ்டிரைக் வீரர் பென்சிமா

FIFA world cup 2022: காயத்தால் விலகிய பிரான்ஸ் ஸ்டிரைக் வீரர் கரீம் பென்சிமா

21 November 2022, 17:50 ISTMuthu Vinayagam Kosalairaman
21 November 2022, 17:50 IST

கால்பந்து நடப்பு சாம்யினான பிரான்ஸ் அணியிலிருந்து நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரர் இல்லாமலேயே பிரான்ஸ் அணி களமிறங்கவுள்ளது. 

இந்த தொடரில் பங்கேற்றால் பிரான்ஸ் அணிக்காக 100 போட்டிகள் விளையாடிய வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருப்பார் பென்சிமா. ஆனால் பயிற்சியின்போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை அவருக்கு உருவாகியுள்ளது. இதனால் தொடரிலிருந்து அவர் முழுவதுமாக விலகியுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து பென்சிமா கூறியதாவது: "நான் வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்துக்கும் விட்டுக்கொடுத்ததில்லை. ஆனால் அணியின் நலன் பற்றியும், அணிக்காக செய்ததை பற்றியும் எழுந்த சிந்தனையே நான் விலக வேண்டும் என்ற முடிவை எடுக்க செய்தது. உங்களது ஆதரவுக்கு நன்றிகள் என்று கூறினார்.

பென்சிமாவுக்கு இடது தொடை பகுதியில் வலி ஏற்படவே, அதற்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்தபோது, தசை நாரில் காயம் ஏற்பட்டிருப்பது உறுதியானது. இந்த காயத்துக்கு அவர் மூன்று மாத காலம் வரை ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவிறுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அணியின் ஸ்டிரைக் வீரரான பென்சிமா 97 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் காயம் ஏற்பட்ட நிலையில் மூன்று வாரங்கள் வரை ஓய்வில் இருந்து அணிக்கு திரும்பிய அவர், தற்போது மீண்டும் காயத்தால் உலகக் கோப்பை தொடரை விட்டே வெளியேறியுள்ளார்.

பென்சிமா விலவிட்ட நிலையில், அவருக்கான மாற்று வீரர் யாரையும் சேர்க்காமல் 25 வீரர்களுடனே பிரான்ஸ் அணி களமிறங்க இருப்பதாக தெரிகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெல்ல காரணமாக அமைந்த முக்கிய வீரர்களான மிட்பீல்டர்கள் பால் போக்பா மற்றும் என்கோலோ காண்டே, கோல்கீப்பர் மைக் மைக்னன், தடுப்பாட்டகாரர் ரெஸ்னஸ் கிம்பெம்பே, பார்வேர்டு வீரர் கிறிஸ்டோபர் நகுங்கு ஆகியோர் இந்த தொடரில் இடம்பிடித்துள்ளனர். அதேபோல் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ள டிஃபென்டர் ரஃபேல் வரனேவும் கடந்த அக்டோபர் முதல் எந்தவொரு போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.