Tamil News  /  Sports  /  Fifa World Cup 2022: Ban For Female Fans Wearing Revealing Clothes, Exposing Body Parts
கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை காண வரும் பெண் ரசிகைகள் கவர்ச்சிகரமான ஆடை அணிய தடை
கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை காண வரும் பெண் ரசிகைகள் கவர்ச்சிகரமான ஆடை அணிய தடை

FIFA world cup 2022: கவர்ச்சி ஆடைகளுக்கு 'நோ'! பெண் ரசிகைகளுக்கு கட்டுப்பாடு

17 November 2022, 14:12 ISTMuthu Vinayagam Kosalairaman
17 November 2022, 14:12 IST

உலகக் கோப்பை கால்பந்து தொடரை பார்க்க வரும் பெண் ரசிகைகள் ஆடை விவகாரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றதாவர்கள் மீது சிறை தண்டனை வரை நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

22வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை கத்தாரில் தொடங்குகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் முதல் முறையாக இந்த தொடர் நடைபெற இருக்கும் நிலையில், பல்வேறு பிரமாண்ட ஏற்பாடுகளை அந்நாடு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காகவே பல கோடி ரூபாய செலவில் எட்டு மைதானங்களை கட்டப்பட்டுள்ளது. கால்பந்து போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு பல்வேறு விதமான பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

கால்பந்து தொடரை முன்னிட்டு கத்தார் தலைநகரான தோஹா நகரம் திருவிழா போல் மாறியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன. இதனால் போட்டியை காண உலகின் பிற பகுதிகளில் இருந்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கால்பந்து போட்டிகளை அதிகமாக ரசிக்கும் ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து ரசிகர்கள் குவிவதோடு, அவர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்.

இந்த சூழ்நிலையில், பெண் ரசிகைகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சில முக்கிய கட்டுப்பாடுகளை கத்தார் நாட்டு அரசு விதித்துள்ளது. அதன்படி, உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை காண வரும் பெண் ரசிகைகள் மிகவும் கவர்ச்சிகரமான ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும் எனவும், ஆபாசமான செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

கத்தாரில் உள்ள சட்டங்களை அவர்கள் கவனத்தில் கொண்டு, கவர்ச்சி ஆடைகள் அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது. கால்பந்து போட்டியை காண வரும் ரசிகர்கள் தாங்கள் விரும்பியவாறு ஆடைகள் அணிந்து வரலாம் என்று பிபா தனது இணையதளத்தில் கூறியிருந்தாலும், அவர்கள் நாட்டின் சட்டங்களை மதிக்கும் விதமாக நடந்து கொள்ள வேண்டும் ரசிகர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண்கள் தங்களது உடல் உறுப்புகளை மறைத்து, உடல் அங்கங்கள் தெரியுமாறு ஆடைகளை அணியக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆடை விவகாரம் தொடர்பாக உலக கோப்பை போட்டி தலைமை தொழில்நுட்ப அலுவவர் நியாஸ் அபுல்ரஹிமான், " மைதானங்கள் ஆட்டத்தை காண வரும் ரசிகர்கள் அமரும் குறிப்பிட்ட இருக்கையை பெரிதாக்கவும், பார்வையாளரைத் தெளிவாகப் பார்க்கவும் எங்களிடம் உயர் தொழில்நுட்பம் கொண்ட சிறப்பு கேமராக்கள் உள்ளன. எனவே இதுபோன்ற நிகழ்வுக்கு பிந்தைய விசாரணைக்கு அது உதவும்" என்றார்.

இதுதொடர்பாக கத்தார் நாட்டை சேர்ந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், "கத்தாரில் பயணம் செய்யும் பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடை கட்டுப்பாட்டை பின்பற்றாதவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படலாம். இதற்காக சிறை தண்டனையும் விதிக்கப்படலாம்.

இங்கு நிலவும் அதிக வெப்பம் காரணமாக ரசிகர்கள் தங்கள் சட்டைகளை கழற்றினால், மைதானங்களில் பொருத்தப்பட்டுள்ள பிரத்யேக கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உலகக் கோப்பை இணையதளத்தில், " உலகக் கோப்பை போட்டியை காண வரும் ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணியலாம். அதே வேளையில் பொது இடங்கள், அருங்காட்சியகங்கள், பிற அரசு கட்டடங்கள் போன்றவற்றுக்கு செல்லும்போது ரசிகர்கள் தோள்கள், முழங்கால்களை மறைக்கும் விதமாக ஆடை அணிய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்