தமிழ் செய்திகள்  /  Sports  /  Fifa Wc 2022: Teams Entered Last 16 Round

FIFA WC 2022: கடைசி 16 ரவுண்டுக்குள் நுழைந்த அணிகள் எவை?

I Jayachandran HT Tamil
Dec 02, 2022 10:24 AM IST

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா உலகக் கோப்பை 2022 போட்டியில் கடைசி 16 ரவுண்டு சுற்றுக்கு இதுவரை 14 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

பிபா உலகக் கோப்பை 2022
பிபா உலகக் கோப்பை 2022

ட்ரெண்டிங் செய்திகள்

மொத்தம் 8 குரூப் களில் 32 நாட்டு அணிகள் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு குருப்பிலும் 4 அணிகள் இருந்தன.

இதில் குரூப் ஹெச் தவிர மற்ற குரூப்களில் லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இதில் 14 அணிகள் கடைசி 16 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன.

குரூப் ஹெச்சில் இருந்து 2 அணிகள் மட்டுமே பாக்கி. அதற்கான போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.

இதுவரை தகுதியான அணிகள் விவரம்-

ஏ குரூப்

நெதர்லாந்து, செனகல்

பி குரூப்

இங்கிலாந்து, அமெரிக்கா

சி குரூப்

அர்ஜெண்டினா, போலந்து

டி குரூப்

பிரான்ஸ், ஆஸ்திரேலியா

ஈ குரூப்

ஜப்பான், ஸ்பெயின்

எஃப் குரூப்

மொராக்கோ, குரேஷியா

ஜி குரூப்

பிரேசில், ஸ்விட்சர்லாந்து

ஹெச் குரூப்பில் போர்ச்சுகல், கானாவுக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் கொரியன் ரிப்பளிக் அணி இன்று கூடுதல் கோல் போட்டு வெற்றி பெற்றால் போர்ச்சுகலுடன் கொரியன் ரிப்பப்ளிக் அணியும் தகுதி பெற வாய்ப்புள்ளது.

அர்ஜெண்டினா, பிரான்ஸ், பிரேசில், ஸ்பெயின் ஆகிய ஜாம்பவான்கள் இந்த இரண்டாவது சுற்றில் இடம் பெற்றுள்ளதால் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடைசி 16 ரவுண்டு நாக் அவுட் முறையில் விளையாடப்படும் என்பதால் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான் என விளையாட்டு விமர்சகர்கள் கூறினர்.

WhatsApp channel

டாபிக்ஸ்