தமிழ் செய்திகள்  /  Sports  /  Fifa Suspends Aiff Due To Third Party Influence

மூன்றாம் தரப்பு தலையீடு: இந்திய கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம் செய்த ஃபிபா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 16, 2022 10:56 AM IST

மூன்றாம் தரப்பினர் தலையீடு காரணமாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம் செய்யப்படுவதாக சர்வதேச கால்பந்து சமமேளமான ஃபிபா தெரிவித்துள்ளது. இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த 17 வயது உட்பட்டோருக்கான கால்பந்து போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.

இந்திய கால்பந்து கூட்டமைப்பை நீக்கிய ஃபிபா
இந்திய கால்பந்து கூட்டமைப்பை நீக்கிய ஃபிபா

ட்ரெண்டிங் செய்திகள்

மூன்றாம் தரப்பினரின் அத்துமீறிய தலையீட்டால் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை இடைநீக்கம் செய்வது என ஃபிபா கவுன்சில் சார்பில் ஒருமித்தமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தலையீடு, ஃபிபா அமைப்பின் விதிகளை மீறிய செயலாக உள்ளது.

இந்திய கால்பந்து கூட்டமைப்பில் புதிய நிர்வாகிகள் இன்னும் முறையான தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்திய கால்பந்து கூட்டமைப்பு செயற்குழுவின் அதிகாரங்களை ஏற்க நிர்வாகிகள் குழுவை அமைக்க உதர்ரவு பிறபித்தபின் இந்த இடைநீக்கம் திரும்ப பெறப்படும்.

வரும் அக்டோபர் மாதம் 11 முதல் 30 வரை இந்தியாவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த U17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரை இந்தியாவில் நடத்த இயலாது. இந்த தொடரை வேறு எங்கு நடத்தலாம் என்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு ஃபிபா தெரிவித்துள்ளது.

இந்த இடைநீக்கம் காரணமாக தற்போது நடத்தப்படும் உள்நாட்டுப் போட்டிகளை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) அல்லது ஃபிபா ஆகியவற்றால் அங்கீகாரம் அளிக்கப்படாது, அதே நேரத்தில் தேசிய அணி எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் விளையாட முடியாது.

இந்தியா கால்பந்து கூட்டமைப்பை நிர்வாகிப்பதற்கும், 18 மாதங்களாக நிலுவையில் உள்ள தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு மூன்று பேர் அடங்கிய குழு உச்ச நீதிமன்றம் சார்பில் கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டது. அதேபோல் ஃபிபா மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பும் இணைந்து குழு ஒன்றை அனுப்பை இந்திய கால்பந்து கூட்டமைப்பின் பங்குதாரர்களை சந்தித்து, ஜூலைக்குள் அதன் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கும், செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தல் முடிவதற்குமான வரைவை உருவாக்கியது.

இந்த சூழ்நிலையில் தற்போது இந்திய கால்பந்து கூட்டமைப்பு நீக்கமானது நிகழ்ந்துள்ளது. ஃபிபா சட்ட விதிகளின்படி அதன் உறுப்பினர் கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் சட்ட மற்றும் அரசியல் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு தலையீடுகள் இருந்தால் அந்த நாடுகள் இடைநீக்கம் செய்யப்படும். இதுபோன்ற பல்வேறு தருணங்களில் பல்வேறு நாட்டு தேசிய அணிகளை இடைநீக்கம் செய்துள்ளது.

தற்போது இந்த இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருடன் நல்ல தொடர்பில் இருந்து வரும் ஃபிபா, விரைவில் சாதகமான முடிவை எடுக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.

WhatsApp channel