Tamil News  /  Sports  /  Fans Clash In Fifa World Cup Opener: Ecuador Supporter's Controversial Act Leaves Qataris Fuming, Video Goes Viral
சர்ச்சையான செய்கையை வெளிப்படுத்திய ஈகுவேடார் ரசிகர்
சர்ச்சையான செய்கையை வெளிப்படுத்திய ஈகுவேடார் ரசிகர்

FIFA World Cup 2022 Fans clash: சர்ச்சை செய்கையை வெளிப்படுத்திய ஈகுவேடார் ரசிகர்

21 November 2022, 21:21 ISTMuthu Vinayagam Kosalairaman
21 November 2022, 21:21 IST

ஈகுவேடார் வீரர் விலேன்சியா அடித்த கோல் ஆப்சைட் என மறுக்கப்பட்டதற்கு ரசிகர் ஒருவர் வெளிப்படுத்திய செய்கையின் விடியோ சர்ச்சையை கிளப்பியது. தொடரின் முதல் ஆட்டத்திலேயே இப்படியொரு பரபரப்பான நிகழ்வு ஏற்பட்டது.

கத்தாரில் நடைபெற்று வரும் 22வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் கத்தார் அணியை ஈகுவேடார் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பான ஆடத்தை வெளிப்படுத்தின.

ட்ரெண்டிங் செய்திகள்

இருந்தபோதிலும் ஆட்டத்தின் முதல் பாதிகுள்ளாகவே ஈகுவேடார் வீரர் விலேன்சியா இரண்டு கோல்களை அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதைத்தொடர்ந்து பிற்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காவிட்டாலும் ஈகுவேடார் அணி இரண்டு கோல்களை அடித்த நிலையில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டி தொடங்கிய 3வது நிமிடத்திலேயே ஈகுவேடார் வீரர் விலேன்சியா கோல் அடித்தார். ஆனால் அது ஆப்சைடு என மறுக்கப்பட்டது. VAR எனப்படும் விடியோ அசிஸ்டென்ஸ் ரெப்ரி மூலமாக சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

ஆனால் இதைக் கண்டு பொறுத்துக்கொள்ளாத ஈகுவேடார் ரசிகர், பணம் கொடுத்து கத்தார் நாட்டினர் ரெப்ரியை விலைக்கு வாங்கியுள்ளனர் என்பதை குறிப்பிடும் விதமாக செய்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஈகுவேடார் ரசிகர்கரின் இந்த செய்கையை பார்த்து பொங்கிய கத்தார் நாட்டு ரசிகர் "வாயை மூடி உட்காரவும்" என அவரை மிரட்டும் தொனியில் கத்தியுள்ளார்.

இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்த விடியோவுக்கு இரு நாட்டு ரசிகர்களும் ஒரு புறம் பொங்க, ஒரு சிலரோ, " இறுதியில் அழகான ஆட்டத்தை காண ஒன்று கூடியுள்ளோம்", "விளையாட்டின் மீதான ஆர்வத்தில் இதுபோன்ற சில செயல்கள் பலரை வருத்தம் அடைய செய்கிறது. இந்த விளையாட்டு நம்மை அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது" என சிலரும் பாஸிடிவாக கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கத்தார் அணி வெற்றி பெறும் விதமாக போட்டி பணம் கொடுத்து பிக்ஸ் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், இப்படியொரு சர்ச்சையான செய்கையை ஈகுவேடார் ரசிகர் வெளிப்படுத்தியுள்ளார்.

டாபிக்ஸ்