தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Euro 2024: 25 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரியாவுக்கு எதிராக தோல்வி! நெதர்லாந்து நாக் அவுட்

Euro 2024: 25 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரியாவுக்கு எதிராக தோல்வி! நெதர்லாந்து நாக் அவுட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 26, 2024 08:40 AM IST

யூரோ 2024 கால்பந்து தொடரின் பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரியா 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியுள்ளது. குரூப் F பிரிவில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரியாவுக்கு எதிராக தோல்வியுடன் நெதர்லாந்து நாக் அவுட் ஆகியுள்ளது.

25 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரியாவுக்கு எதிராக தோல்வியுடன் நெதர்லாந்து நாக்அவுட்
25 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரியாவுக்கு எதிராக தோல்வியுடன் நெதர்லாந்து நாக்அவுட்

ட்ரெண்டிங் செய்திகள்

நெதர்லாந்து நாக் அவுட்

துரதிர்ஷ்டவசமாக, நெதர்லாந்து கால்பந்து அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க ஜூன் 25ஆம் தேதி, 2024ஆம் ஆண்டில் மற்றொரு மோசமான நிகழ்வை சந்தித்துள்ளது. ஆஸ்திரியா அணியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்து மோசமான தோல்வியை தழுவியுள்ளது. இதனால் யூரோ 2024 தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

நெதர்லாந்து கடையாக ஆஸ்திரியாவிடம் 1990இல் தான் தோல்வியை தழுவியது. அதன் பிறகு இரு அணிகளுக்கும் இடையிலான மோதலில் தொடர் வெற்றியை பெற்று வந்தது நெதர்லாந்து. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முந்தைய ஏழு போட்டிகளில், நெதர்லாந்து வெற்றி பெற்று இருந்தது. தற்போது 24 வருடங்கள் கழித்து மீண்டும் ஆஸ்திரியா அணிக்கு எதிராக சரணடைந்துள்ளது.

கட்டாய வெற்றி போட்டி

குரூப் டி பிரிவில் இடம்பெற்றிருக்கும் நெதர்லாந்து அணிக்கு, ஆஸ்திரியாவுக்கு எதிரான இந்த போட்டி கட்டாய வெற்றியை பெற வேண்டியாக அமைந்திருந்தது. ஏற்கனவே விளையாடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு டிரா என இருந்தது நெதர்லாந்து.

ஆஸ்திரியாவை பொறுத்தவரை ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் இருந்தது. இந்த போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் என்பதால் மிகுந்து ஆராவரத்துடன் போட்டி நடைபெற்றது.

ஆஸ்திரியா நல்ல தொடக்கம்

மிகவும் முக்கியத்துவமான போட்டி என்பதால் நெதர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய இரு அணிகளும் சிறப்பாகவே தொடங்கின. ஆட்டத்தின் 6வது நிமிடத்திலேயே ஆஸ்திரியா வீரர் டோன்யல் மேலன் தனது அணிக்கு முதல் கோல் அடித்தார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக நெதர்லாந்து முயற்சி பலன் அளிக்கவில்லை. முதல் பாதியில் 1-0 என ஆஸ்திரியா நல்ல தொடக்கத்துடன் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியில் கோல் மழை

நெருக்கடியுடன் இரண்டாம் பாதியில் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே கோல் அடித்து டென்ஷனை குறைத்தார் அந்த அணி வீரர் கோடி காக்போ. ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் இந்த கோல் கிடைத்தது.

தொடர்ந்து ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் ஆஸ்திரியா வீரர் ரோமானோ ஷ்மிட், ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் மெம்பிஸ் டிபே ஆகியோர் கோல் அடிக்க இரு அணிகளும் தலா 2 கோல்களை அடித்திருந்தன.

இதன் பின்னர் ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் ஆஸ்திரியா வீரர் மார்செல் சபிட்சர் அடித்த கோல் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த கோல் மூலம் ஆஸ்திரியா முன்னிலை பெற்றது. எஞ்சி இருந்த 10 நிமிடத்தில் நெதர்லாந்து மேற்கொண்ட கோல் முயற்சி பலன் அளிக்காமல் போனது.

இறுதியில் முழு ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரியா வெற்றி பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. நெதர்லாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என 4 புள்ளிகளுடன் வெளியேறியது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.