என்னாது 3 வருசத்துக்கு அப்புறம் சதம் அடித்தேனா? விமர்சகரிடம் சீரிய ரோகித் சர்மா
தன்னை குறைவான செயல்திறனை கொண்டவராக காண்பிப்பதாக ஒளிபரப்பாளர்களை ரோகித் சர்மா குறை கூறி உள்ளார்
நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, 101 ரன்கள் எடுத்து ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 30வது சதத்தை பதிவு செய்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை பதிவு செய்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக முன்னாள் கேப்டன் விராட் கோலி 46 சதங்களுடன் உள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இவர்களின் வரிசையில் 30 சதங்களுடன் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளார். இந்நிலையில், அவரது சாதனையை நேற்றைய ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம் ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.
அவரும் தற்போது 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுவரை மொத்தம் 241 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள ரோகித் சர்மா, மொத்தம் 9,782 ரன்களை குவித்துள்ளார்.
ODI இல் 48 அரை சதங்களையும், 30 சதங்களை பதிவு செய்து அசத்தியுள்ளார். அத்துடன் ODI -இல் 3 முறை இரட்டை சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்திருக்கிறார் ரோகித் சர்மா.
இந்தூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரோஹித் சர்மா, குறைவான செயல்திறனை கொண்டவராக காண்பிப்பதாக ஒளிபரப்பாளர்களை குறை கூறி உள்ளார். ஆட்டத்தின் முடிவில் 3 ஆண்டுகளுக்கு சதம் அடித்ததை எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, கடந்த மூன்று வருடங்களில், நான் 12 அல்லது 13 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளேன்; என்ன நடக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
"நான் சொன்னது போல் 2020ஆம் ஆண்டில் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை, கொரோனா தொற்று காரணமாக அனைவரும் வீட்டில் அமர்ந்திருந்தனர். 2021 மற்றும் 2022 டி20 உலகக் கோப்பையின் ஆண்டுகள், எனவே அதில் கவனம் செலுத்தப்பட்டது என ரோகித் சர்மா தெரிவித்தார். நேற்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதைத் தொடர்ந்து ஐசிசி ஆடவர் ஒருநாள் அணி தரவரிசையில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.