தமிழ் செய்திகள்  /  Sports  /  Delhi Capitals Unveil Jersey For Indian Premier League 2023

IPL 2023: டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர்கள் அணியப்போகும் ஜெர்ஸி இதுதான்!

Manigandan K T HT Tamil
Mar 19, 2023 02:19 PM IST

Delhi Capitals: இதுவரை டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஒரு முறை கூட சாம்பியன் ஆனதில்லை.

டெல்லி அணியின் புதிய ஜெர்ஸியை அணிந்திருப்பவர்கள்
டெல்லி அணியின் புதிய ஜெர்ஸியை அணிந்திருப்பவர்கள் (@DelhiCapitals)

ட்ரெண்டிங் செய்திகள்

சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

இந்த சீசன் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான எம்.எஸ்.தோனி தலைமையிலான சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மார்ச் 31ம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப் பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

லீக் ஆட்டங்கள் மே 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடைசி லீக் ஆட்டம் பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

ஐபிஎல் போட்டி ஆண்டுதோறும் திருவிழா போல நடந்து வருகிறது. இதுவரை டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஒரு முறை கூட சாம்பியன் ஆனதில்லை.

இந்த ஆண்டு டேவிட் வார்னரை கேப்டனாகவும், அக்ஸர் படேலை துணை கேப்டனாகவும் நியமித்துள்ளது டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்வாகம்.

2023 ஐபிஎல் போட்டிக்கான டெல்லி கேபிட்டல்ஸ் அணியினர் அணிந்து விளையாடும் ஜெர்ஸியை அறிமுகம் செய்துள்ளது.

டுவிட்டரில் அக்சர் படேல், டேவிட் வார்னர், பிருத்வி ஷா ஆகியோர் புதிய ஜெர்ஸியை அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளது டெல்லி கேபிட்டல்ஸ்.

புதிய ஜெர்ஸியை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் இருந்தார்.

அவர் சாலை விபத்தில் சிக்கியதால் இந்த முறை ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை.

இதனால், டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் 2வது முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2016இல் சாம்பியன் பட்டம் வென்றது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்

இஷாந்த் சர்மா (ரூ. 50 லட்சம்), பில் சால்ட் (ரூ. 2 கோடி), முகேஷ் குமார் (ரூ. 5.5 கோடி), மணீஷ் பாண்டே (ரூ. 2.4 கோடி), ரிலே ரோசாசாவ் (ரூ. 4.60கோடி).

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

ரிஷப் பண்ட், டேவிட் வார்னர், பிருத்வி ஷா, ரிபல் படேல், ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், யஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகர்கோடி, கலீல் அஹமது, லுங்கி கிடி , முஸ்தாபிசுர் ரகுமான், அமன் கான், குல்தீப் யாதவ், பிரவீன் துபே, விக்கி ஓஸ்ட்வால்.

WhatsApp channel

டாபிக்ஸ்