Cristiano Ronaldo: ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு! கோல் அடித்தவுடன் கைகூப்பி மன்னிப்பு கோரிய ரொனால்டோ - வைரல் விடியோ
ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் விதமாக, கோல் அடித்தவுடன் ரொனால்டோ கைகூப்பி மன்னிப்பு கோரிய விடியோ வைரலாகியுள்ளது. யூரோ கோப்பை தொடரில் அதிக முறை காலிறுதி தொடரில் நுழைந்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது போர்ச்சுகல்.

யூரோ கோப்பை கால்பந்து கோப்பை தொடரின் நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகளில் போர்ச்சுகல் - ஸ்லோவேனியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.
பெனால்டி முறையில் வெற்றி
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்த இந்த போட்டியில் இரு அணிகளும் முழு ஆட்ட நேரம் முடிவிலும், கூடுதல் நேரத்திலும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இறுதியில் பெனால்டி சூட் அவுட் முறையில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது. இதனால் ஸ்லோவேனியா அணி தொடரை விட்டு வெளியேறியது. போர்ச்சுகல் அணி யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஏழாவது முறையாக காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அத்துடன் யூரோ கோப்பை தொடரில் அதிக முறை காலிறுதிக்கு தகுதி பெற்ற அணி என்ற பெருமையையும் போர்ச்சுகல் அணி பெற்றுள்ளது.
ரொனால்டோ மன்னிப்பு
முன்னதாக இந்த போட்டியின் கூடுதல் நேரத்தின் போது ஆட்டத்தின் 105வது நிமிடத்தில் கிடைத்த பொன்ல்டி வாய்ப்பை பயன்படுத்தி, போர்ச்சுகல் கேப்டனும், ஸ்டார் வீரருமான கிறஸ்டியானா ரொனால்டோ அடித்த ஷாட்டை அற்புதமாக தடுத்தார் ஸ்லோவேனியா கோல் கீப்பர். இதனால் அணிக்கு கிடைக்க வேண்டிய கோல் வாய்ப்பு பறிபோனது. தொடர்ந்து கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்க தவறியது.