Olympic 2024: தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு லவ் ப்ரப்போஸ் செய்த வீரர்! வெற்றிக்கு நடுவே காதல் மழையில் நனைந்தார்!
ஹுவாங்கின் ஒலிம்பிக் அணி வீரர், லியு யுச்சென், முழங்காலில் மண்டியிட்டு மலர் கொத்து கொடுத்து தன்னை திருமணம் செய்து கொள்வதற்கான வேண்டுகோளை விடுத்தார். உணர்ச்சிவசப்பட்ட ஹுவாங் அதை ஏற்றுக்கொண்டார், லியு தனது விரலில் மோதிரத்தை வைத்தபோது கூட்டம் ஆரவாரத்தில் கிளந்து எழுந்தது.
பாரீசில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் சீன வீராங்கணை ஹுவாங் யா கியோங் தங்கம் வென்ற நிலையில் அவரது சக கூட்டாளியிடம் இருந்து காதல் வேண்டுகோளையும் பெற்று உள்ளார்.
தங்கம் வென்று சாதனை படைத்த வீராங்கனை
ஒலிம்பிக் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஹுவாங் யா கியோங் தங்கம் வென்றார் ஹுவாங், தனது கலப்பு இரட்டையர் கூட்டாளியான ஜெங் சி வெய்யுடன் இணைந்து, போட்டி முழுவதும் தோற்காமல் இருந்தார். காலிறுதியில் முதல் இடத்தைப் பிடித்ததுடன் 6க்கு பூஜ்ஜியம் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
மைதானத்தில் மலர்ந்த காதல்
மைதானத்தில் அவர்கள் வெற்றி பெற்ற பிறகு, லா சேப்பல் அரங்கில் இதயம் கனிந்த தருணத்தில் கொண்டாட்டங்கள் தொடர்ந்தன. பதக்க விழாவைத் தொடர்ந்து, ஹுவாங்கின் ஒலிம்பிக் அணி வீரரும், ஆடவர் இரட்டையர் ஆட்டக்காரருமான லியு யுச்சென், முழங்காலில் மண்டியிட்டு மலர் கொத்து கொடுத்து தன்னை திருமணம் செய்து கொள்வதற்கான வேண்டுகோளை விடுத்தார். உணர்ச்சிவசப்பட்ட ஹுவாங் அதை ஏற்றுக்கொண்டார், லியு தனது விரலில் மோதிரத்தை வைத்தபோது கூட்டம் ஆரவாரத்தில் கிளந்து எழுந்தது.
நான் மகிழ்ச்சியாக உள்ளேன்
"நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனெனில் நான் அடைந்த உணர்வை விவரிக்க முடியாது," என்று அவர் கூறினார். "திருமண நிச்சயதார்த்த மோதிரத்தால் நான் ஆச்சரியப்பட்டேன். ஒலிம்பிக் சாம்பியன் ஆவதற்கான பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறேன். நான் அதை எதிர்பார்க்கவே இல்லை.” என அவர் கூறினார்.
முன்னதாக பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடங்குவதற்கு சற்று முன்பு, அர்ஜென்டினாவின் ஃபீல்ட் ஹாக்கி வீராங்கனையான மரியா காம்பாய், அர்ஜென்டினாவுக்கான ஹேண்ட்பால் வீரரான அவரது காதலரான பாப்லோ சிமோனெட்டிடம் இருந்து காதல் வேண்டுகோளை பெற்றார்.
தொடர் வெற்றிகளை பெறும் சீனா
1996 ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் சீனா 8 முறை தங்கம் வென்று உள்ளது. டோக்கியோவில் ஃபெங் யான் சேயுடன் இணைந்த ஹுவாங் டோங் பிங்குடன் தங்கம் வென்ற பிறகு வாங் யில்யு ஓய்வு பெற்றார். பாரிஸில் மற்றும் காலிறுதியில் ஜெங் மற்றும் ஹுவாங்கிடம் தோற்றது.
பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் நாட்டிற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென் கிங் சென் மற்றும் ஜியா யி ஃபேன் சனிக்கிழமையன்று அனைத்து சீனா இறுதிப் போட்டியில் லியு ஷெங்ஷு மற்றும் டான் நிங்கை எதிர்கொள்கின்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக் பதக்க பட்டியல்
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியை பொறுத்தவரை 20 தங்கம், 15 வெள்ளி, 12 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 47 பதக்கங்கள் உடன் சீனா முதலிடத்தில் உள்ளது.
இந்தியா வென்றது என்ன?
19 தங்கம், 27 வெள்ளி, 26 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 72 பதக்கங்கள் உடன் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், 12 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 44 பதக்கங்கள் உடன் பிரான்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 3 வெண்கல பதக்கங்களை மட்டுமே வென்று உள்ளது.
டாபிக்ஸ்