உலக பேட்மிண்டன் தரவரிசை.. சாத்விக் - சிராக் ஜோடி பின்னடைவு.. பி.வி. சிந்து முன்னேற்றம் - முழு விவரம்
பேட்மிண்டன் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய நட்சத்திர ஜோடி சாத்விக் - சிராக் கீழே இறங்கியுள்ளனர். தொடர் தோல்வியை தழுவியபோதிலும் பி.வி. சிந்து முன்னேற்றம் அடைந்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த பேட்மிண்டன் தொடர்களில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பெரிதாக ஜொலிக்கவில்லை. இப்படியான நிலையில் பேட்மிண்டன் விளையாட்டுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் சிலர் முன்னேற்றம் அடைந்திருக்கும் நிலையில், இன்னும் சிலர் தங்களது இடங்களில் இருந்து கீழே இறங்கியுள்ளனர்.
சாத்விக் - சிராக் சரிவு
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடருக்கு பின் காயம் காரணமாக, இந்தியாவின் நட்சத்திர இரட்டையர்களான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி சில முக்கிய தொடர்களில் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக அவர் புள்ளிப்பட்டியலில் சரிவை கண்டுள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் தரவரிசையில் முன்னாள் உலக நம்பர் 1 ஜோடிகளான சாத்விக் - சிராக் 11வது இடத்திலிருந்து 18வது இடத்துக்கு சரிந்தனர். சமீபத்தில் நடந்து முடிந்த சுதிர்மான் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடிய ஒரே ஆண்கள் ஜோடியான ஹரிஹரன் அம்சகருணன் மற்றும் ரூபன் குமார் ரெத்தினசபாபதி, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறத் தவறினர். இந்த ஜோடி தற்போது 41வது இடத்தில் உள்ளது