WFI-ன் புதிய தலைவரால் ஓய்வினை அறிவித்த சாக்ஷி மாலிக் - குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கின் ரியாக்ஷன்!
இந்திய மல்யுத்தவீரர்களின் கூட்டமைப்புத் தேர்தலில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய நண்பர் சஞ்சய் சிங் வெற்றி பெற்றதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் அறிவித்தார்.
ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர் விஜேந்தர் சிங்.
சில மாதங்களுக்கு முன், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனையிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டி, டெல்லியில் போராட்டத்தில் குதித்தார், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக். அப்போது, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கை நேரில் சந்தித்து தனது ஆதரவை வழங்கினார், விஜேந்தர் சிங்.
இதனிடையே சாக்ஷி மாலிக், பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நண்பரான சஞ்சய் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக நேற்று(டிசம்பர் 21) அறிவித்தார். மேலும் இது ஒரு தீவிரமான பிரச்னை என்றும் விவரித்தார்.
மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக சுரண்டியதாக, அப்போதைய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரணுக்கு எதிராக இந்த ஆண்டின் தொடக்கத்தில் முன்னணி மல்யுத்த வீரர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.
கண்களில் கண்ணீருடன், ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் தனது மல்யுத்த காலணிகளை மேசையில் வைத்து தனது ஓய்வை அறிவித்தார்.
இந்திய மல்யுத்த வீரர்களின் கூட்டமைப்பின் புதிய தலைவராக, முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரணின் நெருங்கிய நண்பர் சஞ்சய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் விளைவாக முதல் மூன்று மல்யுத்த வீரர்களான சாக்ஷி மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு ஏமாற்றம் கிடைத்தது.
இதுகுறித்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் விஜேந்தர் சிங் பேசியதாவது, "ஒரு வீரராக மிகவும் மோசமாக உணர்கிறேன். ஏனென்றால், ஒரு தடகள வீராங்கனை மிகுந்த கடின உழைப்பிற்குப் பிறகு, அந்த நிலையை அடைகிறார். பாலியல் சுரண்டலுக்கு ஆளானவர்களுக்காக சாக்ஷி, வினேஷ் மற்றும் பஜ்ரங் உட்பட பலரும் தொடர்ந்து குரல் கொடுத்துள்ளனர். இந்த மல்யுத்த வீரர்கள் அனைவரும் நாட்டிற்காக மிக உயர்ந்த அளவில் பதக்கங்களை வென்றுள்ளவர்கள்" என்று இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
"தேர்தல் நடந்த விதம் காரணமாக மல்யுத்தத்தை விட்டுவிடுவதாக சாக்ஷி கூறியபோது, இது ஒரு தீவிரமான பிரச்னை என்று நான் நினைக்கிறேன். இது சம்பந்தப்பட்ட ஜனநாயக செயல்முறைகள் குறித்து நிறைய கேள்விகளை எழுப்புகிறது" என்று குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் மேலும் கூறினார்.
வாரணாசியைச் சேர்ந்த உத்தரப்பிரதேச மல்யுத்த சங்கத்தின் துணைத் தலைவரான சஞ்சய் சிங், 40 வாக்குகளைப் பெற்றார். அவருக்குப் போட்டியாக களமிறங்கிய, அனிதா ஷியோரான் 2010ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்.
ஷியோரானின் குழுவினை சார்ந்த பிரேம் சந்த், தர்ஷன் லாலை 27-19 என்ற கணக்கில் தோற்கடித்து, முக்கிய பொதுச்செயலாளர் பதவியை வென்றார்.
தேவேந்தர் சிங் காடியன், உணவகத்தொழிலில் இருப்பவர்; எதிர்ப்புத் தெரிவிக்கும் மல்யுத்த வீரர்களுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின், ஐடி நானாவதியை 32-15 என்ற கணக்கில் தோற்கடித்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் துணைத் தலைவர் பதவியை வென்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்