Rohan Bopanna: வரலாறு படைத்தார் ரோகன் போபண்ணா! அப்படி என்ன சாதனைன்னு பாருங்க
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Rohan Bopanna: வரலாறு படைத்தார் ரோகன் போபண்ணா! அப்படி என்ன சாதனைன்னு பாருங்க

Rohan Bopanna: வரலாறு படைத்தார் ரோகன் போபண்ணா! அப்படி என்ன சாதனைன்னு பாருங்க

Manigandan K T HT Tamil
Jan 27, 2024 06:36 PM IST

ஏடிபி ஆண்கள் இரட்டையர் பிரிவில் புதிய உலகின் நம்பர் 1 வீரராக உறுதி செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு போபண்ணாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

இந்திய வீரர் ரோகன் போபண்ணா, ஆஸி., வீரர் மேத்யூ எப்டன்
இந்திய வீரர் ரோகன் போபண்ணா, ஆஸி., வீரர் மேத்யூ எப்டன் (AFP)

43 வயதான ரோஹன் போபண்ணா சனிக்கிழமை மாலை ராட் லேவர் அரினாவில் ஒரு வரலாற்றை படைத்தார். இது போபண்ணாவின் முதல் ஆடவர் இரட்டையர் பிரிவு கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். அதிக வயதில் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பெற்றது ரோகன் போபண்ணா தான். இதுவொரு அரிய சாதனையாக கருதப்படுகிறது.

இவருக்கு டென்னிஸ் உலகில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஆஸ்திரேலியா ஓபன் 2024 தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா வீரர் ரோஹன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, சீனா-செக் குடியரசு ஜோடியான ஜாங் ஜீசென், தாமல் மாக்செக்கை எதிர்கொண்டது.

இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் போட்டியின் முடிவு மாறி மாறி சென்றது. வெற்றியாளரை தீர்மானக்கும் விதமாக அமைந்த மூன்றாவது செட்டில் இந்தியா ஜோடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 6-3, 3-6, 7-6 (10-7) என்ற செட் கணக்கில் இந்தியாவின் போப்பண்ணா, ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, சீனா - செக் குடியரசு ஜோடியை வீழ்த்தியது.

இதன் முதல் முறையாக ஆஸ்திரேலியா ஓபன் தொடர் இரட்டையர்கள் இறுதிப்போட்டியில் நுழைந்து சாதித்துள்ளார் போப்பண்ணா.

ரோஹன் போபண்ணா இரட்டையர் பிரிவில் நிபுணத்துவம் பெற்ற இந்திய தொழில்முறை டென்னிஸ் வீரர் ஆவார். அவர் 2024 ஆஸ்திரேலிய ஓபனின் போது உலக இரட்டையர் தரவரிசையில் உலக நம்பர் 1 இடத்தைப் பெற்றார். 43 வயது மற்றும் 300+ நாட்களில் முதல் முறையாக நம்பர் 1 இடத்தை பிடித்து சாதனை படைத்ததார். 2024 க்கு முன் அவரது அதிகபட்ச முந்தைய தரவரிசை ஜூலை 2013 இல் மூன்றாவது மற்றும் 2023 இன் இறுதியில் இருந்து 2024 வரை இருந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.