Manu Bhaker: 20 ஆண்டுக்கு பின் சாதனை நிகழ்த்திய மனு பாக்கர்..! 10மீ பெண்கள் ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி
22 வயதாகும் இந்திய இளம் வீராங்கனை மனு பேக்கர் 580 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அத்துடன் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற இருக்கும் தங்கபதக்கத்துகான சுற்றில் தகுதி பெற்றுள்ளார். இதன் தனிப்போட்டியில் நேரடியாக தகுதி பெறும் வீராங்கனை மூலம் 20 ஆண்டுக்கு பின் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

10மீ பெண்கள் ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சாதனை நிகழ்த்திய மனு பாக்கர் (AP)
இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் 10 மீட்டர் பெண்கள் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளார். இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் நாளே இந்தியாவுக்கு பாஸிடிவ் தொடக்கத்தை அளித்துள்ளார்.
முன்னதாக, துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர்கள், வீராங்கனை பல்வேறு பிரிவுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும் அடுத்த சுற்றுக்கான முன்னேறத்தை பெறாமல் வெளியேறினார். இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஒட்டு மொத்தமாக போக்கும் விதமாக பாக்கர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னேறியுள்ளார்.
22 வயதாகும் துப்பாக்கி சுடும் வீராங்கனையான மனு பாக்கர், 580 என்ற தகுதி புள்ளிகளை பெற்று, மூன்றாம் இடத்தைப் பிடித்ததோடு இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தார்.
