Indian Cricket Team: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்ஸி.. பிசிசிஐ வெளியீடு!
Indian cricket team's new Jersey: இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய பயிற்சி ஜெர்ஸியை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது.
அடிடாஸ் நிறுவனம் தயாரித்த இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்ஸி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 16-வது சீசன் டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே பைனலுக்கு தகுதி பெற்றுவிட்டது. இன்னும் இரண்டு போட்டிகள் தான் உள்ளது. இன்று நடக்கும் இரண்டாவது தகுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் குஜராத் அணி, ஐந்து முறை கோப்பை வென்ற மும்பை அணியை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதிப் போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இதற்காக விராட் கோலி தலைமையில் இந்திய அணியின் சில வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்று பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக 2016-ல் இருந்து 2020 ஆம் ஆண்டு வரை நைக் நிறுவனம் இருந்தது. அதைத் தொடர்ந்து 2020-ல் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக இருந்து வந்த எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்தது.
இந்திய அணியின் மெயின் ஸ்பான்சராக பைஜூஸ் நிறுவனம் இருந்து வருகிறது. இந்நிலையில், புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ செயலர் ஜெய் ஷா வெளியிட்டிருந்தார். வரும் ஜூன் 7-ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இருந்து அடிடாஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் தொடங்குகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சிக்கான புதிய ஜெர்ஸியை பிசிசிஐ அறிமுகப்படுத்தி உள்ளது. அடிடாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த புதிய ஜெர்ஸி நீல வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. புதிய பயிற்சி ஜெர்சியை வீரர்கள், பயிற்சியாளர்கள் அணிந்து இருக்கும் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்