தமிழ் செய்திகள்  /  Sports  /  Bcci To Give Chance For 3 Players In T20 Wc Who Was Not Been In Part Of Asia Cup

BCCI:ஆசிய கோப்பையில் விளையாடாத 3 பேருக்கு டி20 உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 10, 2022 03:08 PM IST

இந்திய அணியில் ஆசிய கோப்பை தொடரில் விளையாடாத வீரர்களில் மூன்று பேர் டி20 உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு அளிக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் விளையாடாத மூன்று பேருக்கு டி20 உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு அளிக்க பிசிசிஐ முடிவு
ஆசிய கோப்பை தொடரில் விளையாடாத மூன்று பேருக்கு டி20 உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு அளிக்க பிசிசிஐ முடிவு

ட்ரெண்டிங் செய்திகள்

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடவுள்ளது. இதையடுத்து டி20 தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணி செம்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதையடுத்து டி20 உலகக் கோப்பை தொடருக்காக சிறந்த இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தேர்வுகுழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுஒருபுறம் இருக்க ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய அணியிலிருந்து மூன்று பேரை நீக்கி அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்கள் அணியில் சேர்க்கப்படுவார்கள் என பேச்சு எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஓய்வு அளிக்கப்பட்ட பும்ரா, ஷமி அணிக்கு திரும்பும் வாய்ப்பு இருப்பதால் தற்போதைக்கு 12 வீரர்கள் வரை உறுதியாகியுள்ள நிலையில், மேற்கொண்டு மூன்று புதிய வீரர்கள் சேர்க்கப்படலாம் எனவும் தகவல்கள் பரவுகின்றன.

பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் இந்திய அணி பந்துவீச்சில் தொடர்ந்து சொதப்பலை வெளிப்படுத்தி வருகிறது. ஜெயிக்க வேண்டிய ஆட்டங்களிலும் பந்து மோசமான பந்து வீச்சினால் தோல்வியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே பந்து வீச்சை பலப்படுத்தும் முயற்சியாக வேகபந்து வீச்சாளர்களை சேர்க்கப்படலாம் என தெரிகிறது. தற்போது காயம் காரணமாக அணியிலிருந்து நீ்க்கப்பட்டுள்ள ஸ்டிரைக் பெளலர் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் தங்களது பிட்னஸை முழு பிட்னஸை நிருபிக்கும் பட்சத்தில் அவர் அணியில் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.

விக்கெட் கீப்பர் ரோலில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என இருவர் இருந்தாலும், ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் இருக்கும் பெளன்சர் பந்து வீச்சை எளிதில் எதிர்கொள்ள சாம்சன் போன்ற பேட்ஸ்மேன்கள் தேவை என்பதால் அவரும் அணியில் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா வேகப்பந்து வீச்சுக்கு சப்போர் செய்யும் விதமாக இருப்பதால், கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் அணிக்கு தேவை. தீபக் சஹார் அணியில் திரும்பியிருப்பது நம்பிக்கை அளிக்கும் விஷயமாகவே இருப்பதோடு கொஞ்சம் பேட்டிங்கும் செய்யக்கூடியவர் என்பதால் அவர் அணியில் இருப்பது பலம்தான். அதேபோல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷிமியும் தற்போது பந்து வீச்சாளர்கள் தேர்வு பரிந்துரை பட்டியிலில் உள்ளார்.

எனவே ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்காத வீரர்களில் பும்ரா, ஹர்ஷல் படேல், ஷமி, சாம்சன் ஆகியோரில் மூன்று பேர் டி20 உலகக் கோப்பை அணியில் கண்டிப்பாக இடம் பெறுவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்