Tamil News  /  Sports  /  Bangladesh Cricket Board Appoints David Moore As Head Of Programs
ஆஸி., நியூ சவுத் வேல்ஸ் அணியின் முன்னாள் வீரர்
ஆஸி., நியூ சவுத் வேல்ஸ் அணியின் முன்னாள் வீரர் (@DavidJAMoore1)

Bangladesh cricket: ஆஸி., முன்னாள் வீரருக்கு வங்கதேச அணியில் முக்கிய பொறுப்பு!

19 January 2023, 11:29 ISTManigandan K T
19 January 2023, 11:29 IST

வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான டேவிட் மூரை வங்கதேச கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்கான திட்டங்களின் (Programs) தலைவராக நியமித்துள்ளது.

வங்கதேச வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, மூர் "எச்பி (உயர் செயல்திறன்) மற்றும் வங்கதேச டைகர்ஸ் புரோகிராம்களை திட்டமிடுதல், உத்திகளை வகுத்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றின் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தத் திட்டங்கள் நேரடியாக வங்கதேச அணியின் நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

58 வயதான மூர், அடுத்த மாதம் முதல் இந்தப் புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார். வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடன் அவருக்கு இரண்டு வருட காலத்திற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயிற்சியாளர்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களையும் அவர் மேற்பார்வையிடுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம், கிரிக்கெட் நடவடிக்கைகளின் தலைவர் ஜலால் யூனுஸ், வீரர்களின் வளர்ச்சியை மையப்படுத்தும் முயற்சியில் இந்த பொறுப்பு பற்றி ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து அவர் பிரபல ஆங்கில கிரிக்கெட் வலைத்தளத்திற்கு அளித்த பேட்டியில், "தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றோம் ஆனால் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. நியூசிலாந்தில் ஒரு டெஸ்டில் வெற்றி பெற்றோம். இது போதாது என்று நினைக்கிறேன். டெஸ்ட் மற்றும் டி20க்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறோம். எங்கள் விளையாட்டின் இந்த அம்சத்தை வலுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சியை நாங்கள் முன்னெடுக்க விரும்புகிறோம்." என்றார்.

டேவிட் மூர் கூறுகையில், "வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் திட்டமிடல் தலைவராக எனது பணியைத் தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தலைமைப் பயிற்சியாளர், அவரது பயிற்சி மற்றும் ஆதரவு ஊழியர்கள் மற்றும் வீரர்களுடன் இணைந்து அவர்களின் திறனை வெளிக்கொணர அவர்களுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன்" என்றார்.

டேவிட் மூர் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடியவர் ஆவார்.

பெர்முடா தேசிய கிரிக்கெட் அணிக்கு அவர் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

டாபிக்ஸ்