Arshad Nadeem : ‘கிரிக்கெட் to ஈட்டி எறிதல்.. ஊரே கொடுத்த நன்கொடையில் பயணம்..’ தங்கம் வென்ற நதீமின் கதை!
Arshad Nadeem : அர்ஷத் இன்று இந்த இடத்திற்கு எப்படி வந்தார் என்று மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது ஆரம்ப நாட்களில் அவரது பயிற்சி மற்றும் நிகழ்வுகளுக்காக மற்ற நகரங்களுக்குச் செல்வதற்காக அவரது சக கிராமவாசிகள் மற்றும் உறவினர்கள் தான் நன்கொடையாக பணம் கொடுத்தனர்.

Arshad Nadeem : ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமின் வாழ்க்கை பயணம், பாரிஸில் அவரது ஆட்டத்தைப் போலவே வியப்பானது. பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்த நதீம், ஈட்டி எறிதல் விளையாட்டில் சேரும் முன்பு, மாநில அளவில் வயதுக்குட்பட்ட கிரிக்கெட் விளையாடினார். ஆனால் அவர் கிரிக்கெட் விளையாட்டை மாற்றி ஈட்டி எறிதலுக்கு வந்தது தான் இன்று அவருக்கு தங்கம் பெற்று தந்துள்ளது. 2022 இல் பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நதீமிற்கு திருப்புமுனை ஏற்பட்டது.
அங்கு ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற முதல் பாகிஸ்தான் தடகள வீரர் என்ற பெருமையைப் நதீம் பெற்றார். இந்த வெற்றியானது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு 56 ஆண்டுகால பதக்க வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. அதே நிகழ்வில் அவரது தனிப்பட்ட சிறப்பாக 90.18 மீட்டர் எறிந்து, அவரின் அடுத்தடுத்த பயணத்திற்கு தூண்டுகோளாக இருந்தது.