Australian Open: இரண்டு முறை சாம்பியனை அப்செட் செய்த கீஸ்.. முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை
Australian Open 2025: இரண்டு முறை சாம்பியன் சபலென்காவை வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார் அமெரிக்காவில் கீஸ். 2000 ஆம் ஆண்டு முதல், 29 வயதான கீஸ் ஆஸ்திரேலிய ஓபன் வென்ற ஐந்தாவது அமெரிக்க வீராங்கனையாக திகழ்கிறார்.

ஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் அமெரிக்காவின் மோடிசன் கீஸ், பெலருசிய வீராங்கனை ஆர்யனா சபலென்காவை வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். மூன்றாவது முறை ஆஸ்திரேலியா ஓபன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஆர்யனா சபலென்காவை 6-3, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் 29 வயதாகும் கீஸ் வீழ்த்தினார்.
கனவு தகர்ப்பு
இரண்டு முறை ஆஸ்திரேலேயா ஓபன் பட்டத்தை வென்றார் சபலென்கா. இதைத்தொடர்ந்து ஹாட்ரிக் பதக்கத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய 26 வயது சபலென்காவின் கனவரை தகர்த்துள்ளார் மேடிசன் கீஸ்.
மெல்பார்ன் பார்க்கில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு முன்னர் தொடர்ச்சியாக 20 வெற்றிகளை பெற்ற சபலென்காவின் வெற்றி பயணமும் இத்துடன் முடிவுக்கு வந்தது. கடந்த 2023, 2024 ஆஸ்திரேலியா ஓபன் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை வென்றார் சபலென்கா. உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சபலென்காவை அப்செட் செய்துள்ள மேடிசன் கீஸுக்கு இது சாதனை வெற்றியாக அமைந்துள்ளது.
சுமார் 2.30 மணி நேரம் நடந்த இந்த போட்டியில் போராடி வெற்றியை பதிவு செய்தார் கீஸ். கடந்த 2017ஆம் ஆண்டில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற கீஸ், தோல்வியடைந்தார். அதன் பிறகு மிக பெரிய தொடரான ஆஸ்திரேலியா ஓபனில் தற்போது இறுதிவரை முன்னேறி பட்டத்தையும் வென்றுள்ளார்.
நீண்ட காலமாக விரும்பிய பட்டம்
“நீண்ட காலமாக இந்த பட்டத்தை பெற விரும்பினேன். அது நடந்துள்ளது. இதற்கு முன்னரும் ஒரு முறை கிராண்ட் ஸ்லாம் பைனலில் விளையாடினேன். அப்போது நான் எதிர்பார்த்து நடக்கநவில்லை. மீண்டும் இதே போன்தாெரு நிலைக்கு வருவேனா என்பதும் தெரியவில்லை" என்றார்.
இந்த போட்டியானது கீஸ் விளையாடி 46வது கிராண்ட் ஸ்லாம் போட்டியாகும். இதன்மூலம் இந்த பட்டத்தை வெல்வதற்கு முன் அதிக போட்டிகளில் விளையாடிய மூன்றாவது வீராங்கனையாக கீஸ் உள்ளார். கடந்த 2013 இல் விம்பிள்டன் பட்டம் வென்ற பென்னெட்டா 49 போட்டிகள், மரியன் பார்டோலியின் 47 போட்டிகள் விளையாடி தான் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார்கள்.
வெற்றி தருணம்
இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர், கீஸ் தனது முகத்தை கைகளால் மூடிக்கொண்டு, பின் தனது கைகளை உயர்த்தினார். அதைத்தொடர்ந்து தனது கணவரும், 2023 முதல் பயிற்சியாளராகவும் இருந்து வரும் பிஜோர்ன் ஃபிராட்டாஞ்சலோ மற்றும் அணியின் மற்ற உறுப்பினர்களை கட்டிப்பிடித்து வெற்றியை பகிர்ந்து கொண்டார்.
இதற்கிடையே ஹாட்ரிக் பட்டத்தை மிஸ் செய்த சபாலென்கா தனது டென்னிஸ் ராக்கெட்டை கழற்றி, தலையை வெள்ளைத் துண்டால் மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார்.
ஓபன் சகாப்தம் போட்டியில் பட்டம் வென்ற வயதான வீராங்கனை
கடந்த 1968இல் ஏப்ரல் போர்ன்மவுத்தில் உள்ள பிரிட்டிஷ் ஹார்ட் கோர்ட்ஸில் ஓபன் சகாப்தம் நடைமுறைக்கு வந்தது. 1968ஆம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பில் தொழில்முறை வீரர்கள் போட்டியிட இங்கிலாந்து கிளப் அனுமதித்தபோது, முக்கிய டென்னிஸ் நிர்வாக அமைப்பான சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பும் மற்ற கிராண்ட்ஸ்லாம்களையும் அங்கீகரித்தது.
அந்த வகையில், 1968ஆம் ஆண்டில் இருந்து ஓபன் ஓபன் சகாப்தம் தொடங்கியதிலிருந்து, மேஜர் பட்டத்தை முதன்முறையாக வென்ற நான்காவது வயதான வீராங்கனையாக கீஸ் உள்ளார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்