Tamil News  /  Sports  /  Australia Wins Toss And Bowls First In 2nd Odi Against India Mitchell Starc Super Bowling
சூர்யகுமார் யாதவை 2 ஒரு நாள் ஆட்டத்திலும் எல்பிடபிள்யூ செய்த மிட்செல் ஸ்டார்க்
சூர்யகுமார் யாதவை 2 ஒரு நாள் ஆட்டத்திலும் எல்பிடபிள்யூ செய்த மிட்செல் ஸ்டார்க் (AP)

Ind vs Aus: அனல் பறக்கும் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சு.. தடுமாறும் இந்திய அணி

19 March 2023, 14:42 ISTManigandan K T
19 March 2023, 14:42 IST

Mitchell Starc: ஆஸி.,யின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய வீரர்கள் தவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பீல்டிங்கை ஆஸி., தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்து வருகிறது இந்தியா.

ஆஸி.,யின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய வீரர்கள் தவித்து வருகின்றனர்.

தனிப்பட்ட காரத்துக்காக முதல் ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடாமல் இருந்த ரோகித் சர்மா, இந்த ஆட்டத்தில் அணியை வழிநடத்த வந்தார்.

தொடக்க வீரராக களமிறங்கிய அவர், 15 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்தபோது மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ஸ்டீவன் ஸ்மித்திடம் கேட்சாகி ஆட்டமிழந்தார்.

ரோகித் ஆட்டமிழப்பதற்கு முன்பே முதல் ஓவரிலேயே டாக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார் சுப்மன் கில். அவரும் ஸ்டார்க் பந்துவீச்சிலேயே வெளியேறினார்.

அடுத்த களம் புகுந்த விராட் கோலி மட்டும் நிதானமாக விளையாடி வருகிறார். ரோகித் ஆட்டமிழந்ததை அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், வாண வேடிக்கை காண்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் ஒரு நாள் கிரிக்கெட்டைப் போலவே மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ரன்களின்றி நடையைக் கட்டினார் சூர்யகுமார் யாதவ்.

முதல் ஆட்டத்தில் 75 ரன்கள் விளாசி ஆட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கே.எல்.ராகுல், இந்த ஆட்டத்தில் 9 ரன்களில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். பின்னர் வந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அப்போட் வீசிய பந்தை அடிக்க முயன்றபோது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ஸ்மித்திடம் கேட்ச் ஆனது.

முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க், இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் முதல் 12 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்திய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்து வருகிறார் மிட்செல் ஸ்டார்க்.

பந்தை விரட்டும் விராட் கோலி
பந்தை விரட்டும் விராட் கோலி (AFP)

கோலியும், ஜடேஜாவும் நம்பிக்கையாக இருக்கின்றனர். 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது இந்தியா.

விசாகப்பட்டினத்தில் முதலில் பவுலிங் செய்யும் அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.

விசாகப்பட்டினத்தில் முதலில் பவுலிங் செய்யும் அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 9 முறை முதலில் பவுலிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. 3 முறை மட்டுமே முதலில் பேட்டிங் செய்த அணி இந்த மைதானத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டாபிக்ஸ்