ஊக்கமருந்து பரிசோதனை செய்யாமல் கல்தா! தவறான ஆவணங்களால் முறைகேடு.. உலக சாம்பியன்ஷிப் ஓட்டப்பந்தய வீரருக்கு 4 ஆண்டுகள் தடை
ஊக்கமருந்து பரிசோதனை செய்யாமல் கல்தா கொடுத்து, தவறான ஆவணங்களால் முறைகேடு செய்ய முயற்சித்த உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற ஓட்டப்பந்தய வீரர் முகமது கதிருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற முகமது கதிருக்கு ஊக்கமருந்து பரிசோதனை வராமல் இருந்ததற்காக, ஒழுங்குமுறை தீர்ப்பாயம் அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
26 வயதான ஸ்பானிஷ் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் இருந்து வரும் கதிர், கடந்த ஆண்டு புடாபெஸ்டில் உலக 5000 மீட்டர் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் கடந்த 12 மாதங்களில் மூன்று ஊக்கமருந்து சோதனைகளை தவறவிட்டதற்காக இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டார்.
இதையடுத்து தற்போது விதிக்கப்பட்டிருக்கும் நான்கு வருட தடையானது, தற்போது நடைமுறையில் இருக்கும் இரண்டு ஆண்டு தடையுடன் சேர்த்து பிப்ரவரி 2028ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த தடை காரணமாக அடுத்த டோக்கியோ மற்று்ம பெய்ஜிங்கில் நடக்க இருக்கும் இரண்டு உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க முடியாது. இருப்பினும் 2028இல் லாஸ் ஏஞ்சலஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் அவர் பங்கேற்கலாம்.
மூன்று முறை தவறிவிட்ட ஊக்கமருந்து சோதனை
உலக தடகள சாம்பியன்ஷிப் 1500 மீட்டர் வெண்கலம் மற்றும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் 5000 மீட்டர் வெள்ளி பதக்கம் வென்றவார கதிர் இருந்து வருகிறார். அவர் தவறவிட்ட மூன்று ஊக்கமருந்து பரிசோதனை பற்றிய விளக்கத்தின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தபோது, விசாரணை அதிகாரிகளை திசை திருப்பும் முயற்சியில் ஈடுப்பட்டிருப்பது தெரியவந்தது. தவறான பயணம் திட்டம் , போர்டிங் பாஸ் மற்றும் முன்பதிவு போன்ற பல தவறான பயண ஆவணங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த சூழலில் அவர் ஒரு வருட காலத்துக்கு ஊக்கமருந்து சோதனைகளும் மேற்கொள்ளவில்லை.
தடகள ஒருமைப்பாடு பிரிவு (AIUஇன்) ஒழுங்குமுறை தீர்ப்பாயம் இந்த விவகாரத்தில், "கதிர் தனது நிகழ்வுகளின் தவறான பதிப்பையும், மாற்றப்பட்ட ஆவணங்களையும் முன்வைத்தார் என்பதில் சந்தேகமில்லை. பிப்ரவரி 28, 2023 அன்று தான் ஊக்கமருந்து பரிசோதனை வராமல் தோல்வியடைந்ததை கருதக்கூடாது என்று உலக தடகளத்தை வற்புறுத்துவதற்காக அவர் அவ்வாறு செய்துள்ளார்.
தவறான ஆவணங்களால் முறைகேடு
இந்தச் சூழ்நிலையில், கதிர் ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளை மீறுதல்/ சேதப்படுத்த முயற்சி செய்தார் என்பது வெளிப்படையாகியுள்ளது. ஊக்கமருந்து எதிர்ப்பு வழக்குகளில் வழங்கப்படும் விளக்கங்கள் விளையாட்டு வீரரின் முகத்தை மதிப்பாக ஏற்றுக்கொள்ளப்படும் நாட்கள் தடகள விளையாட்டில் மலையேறிவிட்டன.
உயரடுக்கு விளையாட்டு வீரர்களில் பெரும்பாலோர் விளையாட்டின் கடுமையான விதிகள் மற்றும் செயல்முறைகளை மதிக்கிறார்கள், மேலும் சமமான விளையாட்டு சூழலை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளது
கதிர் மூன்று முக்கிய தடப் பதக்கங்களைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஐரோப்பிய 3000 மீட்டர் உட்புற மற்றும் 5000 மீட்டர் ஓட்டத்தில் சாதனை படைத்தவராக உள்ளார். முறையே 7:27.64 மற்றும் 12:45.01 நிமிடங்களில் இந்த தூரத்தை அவர் கடந்துள்ளார்.
கதிர் வென்ற பட்டங்கள் விவரம்
2022 உலக தடகள சாம்பியன்ஷிப் 1,500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம், 2023 உலக தடகள சாம்பியன்ஷிப் 5,000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி, 2022 ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் 5, 000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றுள்ளார். அத்துடன் 1,500, 3,000, 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஸ்பெயின் நாட்டில் தேசிய அளவில் சாதனை புரிந்துள்ளார்.
டாபிக்ஸ்