Asian Table Tennis Championships: பதக்கத்தை உறுதிய செய்த இந்திய அணி! ஒற்றையர் பிரிவிலும் அடுத்த சுற்றுக்கு தகுதி
ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்துள்ளது இந்திய ஆண்கள் அணி
தென் கொரியா நாட்டிலுள்ள யோங்க் சாங் நகரில் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற ஆண்கள் அணிக்கான காலிறுதி போட்டியில் இந்தியா 3-0 என்ற கணக்கில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியால் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆண்கள் அணி பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதியில் வெற்றி பெறாமல் போனாலும் இந்திய அணிக்கு வெணகல பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
முன்னதாக, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆட்டத்தில் இந்திய வீரர் சரத் கமல் 11-1, 10-12, 11-8, 11-13, 14-12 என்ற செட் கணக்கில் சிங்கப்பூர் நாட்டின் இசாக் குய்க்கை வீழ்த்தினார்.
இதேபோல் மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் சத்யன், ஹர்மீத் தேசாய் ஆகியோரும் தங்களது முதல் போட்டியில் வெற்றியை பெற்றனர்.
பெண்கள் அணிகள் பிரிவின் காலிறுதியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோல்வியை தழுவியது. அத்துடன் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அஹிதா முகர்ஜி, மணிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி ஆகியோர் தங்களது போட்டிகளில் தோல்வியடைந்தனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்