French Open: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் காலிறுதியில் நம்பர் 2 வீராங்கனை சபலென்கா!
Tennis: நாளை நடைபெறவுள்ள காலிறுதி சுற்றில் எலினா ஸ்விடோலினாவை சபலென்கா சந்திக்கிறார். சபெலன்கா, இந்தாண்டு ஆஸி., ஓபன் சாம்பியன் ஆனார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடரான பிரெஞ்சு ஓபன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 2 வீராங்கனையான பெலாரஸின் சபலென்கா காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 2 இடத்தில் இருக்கிறார் சபலென்கா. இவர்,
4வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் ஸ்லோவன் ஸ்டீஃபன்சை நேற்று எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் 7-6 (7-5) என்ற செட் கணக்கில் டை பிரேக்கர் வரை சென்று போராடி வென்றார் சபலென்கா. அடுத்த செட்டிலும் ஸ்டீபன்ஸ் மல்லுக்கட்டினார்.
ஆனால், அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார் சபலென்கா.
இதையடுத்து, காலிறுதிக்குள் நுழைந்தார். நாளை நடைபெறவுள்ள காலிறுதி சுற்றில் எலினா ஸ்விடோலினாவை சபலென்கா சந்திக்கிறார். சபெலன்கா, இந்தாண்டு ஆஸி., ஓபன் சாம்பியன் ஆனார்.
முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் சுற்றுக்கு முன்னதாக நடக்கும் அடிலெய்டு டென்னிஸ் போட்டியில் சபலென்கா சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கடந்த ஆண்டு அவர் அரையிறுதி வரை முன்னேறி தோற்றார்.
காலிறுதியில் ஜோகோவிச்
முன்னதாக, நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச், பெரு வீரர் ஜுவான் பப்லோவை 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இதன்மூலம், அவர் காலிறுதிக்குள் நுழைந்தார். அடுத்த சுற்றில் ரஷ்ய வீரர் கச்சனோவை எதிர்கொள்கிறார் ஜோகோவிச்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்