தமிழ் செய்திகள்  /  Sports  /  Argentina 2-1 Win Over Australia

FIFA World Cup 2022: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது அர்ஜெண்டினா

I Jayachandran HT Tamil
Dec 04, 2022 06:56 AM IST

கத்தாரில் நடைபெறும் 2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது அர்ஜெண்டினா.

ஆஸ்திரேலிய வீரரை கடந்து செல்லும் அர்ஜெண்டி வீரர்
ஆஸ்திரேலிய வீரரை கடந்து செல்லும் அர்ஜெண்டி வீரர்

ட்ரெண்டிங் செய்திகள்

கத்தாரில் உள்ள அகமது பின் அலி ஸ்டேடியத்தில்

அர்ஜெண்டினாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நடைபெற்ற ரவுண்டு 16 நாக் அவுட் போட்டியில் ஆஸ்திரேலியாவை அர்ஜெண்டினா தோற்கடித்துள்ளது. இதன்மூலம் காலிறுதிக்குள் செல்ல அர்ஜெண்டினா தகுதி பெற்றது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்தே ஆஸ்திரேலிய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இருப்பினும் அர்ஜெண்டினாவின் தடுப்பு வீரர்கள் சிறப்பாக அவர்களை எதிர்கொண்டனர்.

கோல் அடிக்கும் வாய்ப்பு பல முறை கிடைத்தும் ஆஸ்திரேலியா அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆஸ்திரேலியா தரப்பில் அர்ஜெண்டினா வீரர் செய்த தவறால் ஒரு செல்ப் கோல் போடப்பட்டது.

திடீரென சூடுபிடித்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி முதல் கோல் போட்டார். அடுத்ததாக இரண்டாவது பாதியில் அர்ஜெண்டினாவின் ஜூலியன் ஆல்வரெஸ் பந்தை வேகமாகக் கடத்தி சென்று ஆஸ்திரேலிய கோல்கீப்பர் மேத்யூ ரையானை சாமர்த்தியமா ஏமாற்றிவிட்டு அணியின் 2ஆவது கோலை போட்டார்.

லியோனல் சிறப்பாக பாஸ் செய்த பந்தை கோல் போஸ்ட்டுக்கு மேலே அடித்து லாவ்டாரோ மார்ட்டீனஸ் நல்ல வாய்ப்பை வீணடித்தார்.

மெஸ்ஸி தந்த பாஸ்களை கோல்களாக மாற்ற அர்ஜெண்டினா வீரர்கள் பலமுறை தவறிவிட்டனர்.

இறுதியில் 2-1 என்ற கோல்கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.

இதன்மூலம் காலிறுதிக்குள் அர்ஜெண்டினா நுழைந்துள்ளது. மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கில் வென்று நெதர்லாந்தும் காலிறுதிக்குள் நுழைந்துள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்