Everton vs Liverpool: நான்கு கோல்கள்.. நான்கு ரெட் கார்டுகள் - களத்தில் வீரர்கள் மற்றும் போலீசார் இடையே நடந்த மோதல்
Everton vs Liverpool: பிரீமியர் லீக் கால்பந்த தொடரில் ஆட்டம் முடிவதற்கு எட்டு நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது, எவர்டன் அணியின் கேப்டன் ஜேம்ஸ் டார்கோவ்ஸ்கி கோல் அடிக்க போட்டியானது 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது.

நான்கு கோல்கள்.. நான்கு ரெட் கார்டுகள் - களத்தில் வீரர்கள் மற்றும் போலீசார் இடையே நடந்த மோதல் (AFP)
இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் நான்கு கோல்கள், நான்கு ரெட் கார்டு மற்றும் கடைசி நேரத்தில் ஒரு கோல் அடித்ததால் போட்டி டிரா என பல திடுக்கிடும் திருப்பங்கள் முதல் முறையாக நடந்துள்ளது.
இங்கிலாந்தின் மெர்சி சைடில் இடம்பிடித்திருக்கும் இரண்டு கால்பந்து கிளப் அணிகளான லிவர்பூல் மற்றும் எவர்டான் அணிகள் மோதும் போட்டிகள் மெர்சிசைட் டெர்பி என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் குடிசன் பார்க்கில் 120ஆவது முறை மோதிக்கொண்ட இந்த இரு அணிகளுக்கு இடையிலான மோதல் இதுவரை இல்லாத அளவில் பயங்கர த்ரில்லராக அமைந்துள்ளதாக வர்ணிக்கப்படுகிறது.
எவர்டன் கேப்டன் ஜேம்ஸ் டார்கோவ்ஸ்கி ஆட்டம் முடிவதற்கு எட்டு நிமிடங்கள் மட்டும் இருக்கும் நிலையில் அடித்த கோல் மூலம் லிவர்பூலுக்கு எதிரான போட்டி டிரா ஆனது.
