Sani: சனி அஸ்தமனமானார்.. பணத்தில் புரளப் போகும் மூன்று ராசிகள் யார்?.. உங்களை தொடவே முடியாது!
- Sani: பிப்ரவரி 28ஆம் தேதி முதல் சனி பகவானின் அஸ்தமனம் தொடங்குகிறது. வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி வரை இந்த காலம் நீடிக்கின்றது. அந்த வகையில் சனி பகவானின் அஸ்தமனத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் செல்வ யோகத்தை பெற்றுள்ளனர்.
- Sani: பிப்ரவரி 28ஆம் தேதி முதல் சனி பகவானின் அஸ்தமனம் தொடங்குகிறது. வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி வரை இந்த காலம் நீடிக்கின்றது. அந்த வகையில் சனி பகவானின் அஸ்தமனத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் செல்வ யோகத்தை பெற்றுள்ளனர்.
(1 / 7)
நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்கக் கூடியவர் சனி பகவான். நீதிமானாக விளங்கக்கூடியவர் இவர். சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதி பலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். இவர் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
(2 / 7)
நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார். சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் சனி பகவான் தற்போது பயணம் செய்து வருகின்றார்.
(3 / 7)
அந்த வகையில் இருள் கிரகமாக விளங்கக்கூடிய சனிபகவானை நோக்கி சூரிய பகவான் பதினைந்து டிகிரிக்குள் வரும்பொழுது சனி பகவானின் அஸ்தமனம் ஏற்படுகிறது. இதன் காரணமாக வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி முதல் சனி பகவானின் அஸ்தமனம் தொடங்குகிறது வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி வரை இந்த காலம் நீடிக்கின்றது.
(4 / 7)
அந்த வகையில் சனி பகவானின் அஸ்தமனத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் செல்வ யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(5 / 7)
ரிஷப ராசி: சனி பகவானின் அஸ்தமனம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை பெற்று தரப்போகின்றது. எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள்.
(6 / 7)
கடக ராசி: சனிபகவானின் அஸ்தமனத்தால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. அஷ்டம சனி உங்களுக்கு நடந்து கொண்டிருக்கின்றது. இருப்பினும் அஸ்தமனத்தால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க போகின்றது. எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக இருக்கும். சிறப்பான பலன்கள் உங்களை தேடி வரும்.
(7 / 7)
மீன ராசி:உங்கள் ராசிக்கு ஏழரை சனியின் விரைய சனி நடந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு சனி பகவானின் அஸ்தமனம் நல்ல நம்பிக்கையை கொடுக்கப் போகின்றது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மன கஷ்டம் மற்றும் கவலைகள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும்.
மற்ற கேலரிக்கள்