Money Luck: பிப்ரவரியில் நடக்கும் 4 கிரக மாற்றம்.. பண அறுவடை செய்ய காத்திருக்கும் ராசிகள்!
- பிப்ரவரி மாதத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகிய நான்கு கிரகங்களின் சேர்க்கை சில ராசியினருக்கு பணவரவைத் தருகின்றன.
- பிப்ரவரி மாதத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகிய நான்கு கிரகங்களின் சேர்க்கை சில ராசியினருக்கு பணவரவைத் தருகின்றன.
(1 / 8)
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி புதன் மகரத்துக்கும் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி செவ்வாய் மகரத்துக்கும், வரும் 12ஆம் தேதி சுக்கிரன் மகரத்துக்கும் என மூன்று கிரகங்கள் பெயர்ச்சி அடைகின்றன. அதேபோல், பிப்ரவரி 13ஆம் தேதி சூரிய பகவான் கும்பத்தில் இணைகிறார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 20ஆம் தேதி புதனும் கும்பத்தில் பெயர்ச்சி அடைகிறார். பிப்ரவரி மாற்றத்தில் நிகழும் இந்த கிரக மாற்றங்களால் பணவரவினைப் பெறும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.
(2 / 8)
மேஷம்: வரும் பிப்ரவரி மாதத்தில் மேஷ ராசியினருக்கு புதாத்ய ராஜயோகத்தாலும், ஆதித்ய மங்கள யோகத்தாலும் சமூகத்தில் செல்வாக்கு உயரும். அரசியல் நட்புகள் கிடைக்கும். பணவரவுகள் அதிகரிக்கும்.
(3 / 8)
ரிஷபம்: வரும் பிப்ரவரி மாதத்தில் ரிஷப ராசியினருக்குப் பல்வேறு யாத்திரைகள் செல்லும் சூழல் ஏற்படும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். வங்கிக்கணக்கில் இருப்புத்தொகை கூடும். அயல்நாடு சென்று படிக்க நினைப்பவர்கள், வெற்றிபெறுவார்கள். தொழிலில் ரிஷப ராசியினருக்கு நிதி நிலை முன்னேற்றம் ஏற்படும்.
(4 / 8)
கடகம்: இந்த ராசியினர் பிப்ரவரி மாதத்தில் செய்யும் முதலீடுகளால் பல்வேறு வெற்றி வாய்ப்பினைப் பெறுவீர்கள். பணியிடத்தில் நற்பெயர் கிட்டும். தொழிலில் கூடுதல் வருமானத்துக்கு வாய்ப்புண்டு. புதிதாக வேலை தேடுபவர்களுக்குப் பணிப் பாதுகாப்புமிக்க இடத்தில் வேலை கிடைக்கவாய்ப்புள்ளது.
(5 / 8)
கன்னி: இந்த ராசியினருக்கு குழந்தைகளால் கடந்த சில நாட்களாக இருந்த மனவுளைச்சல் மாறும். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். காதல் கைகூடாதவர்களுக்குக் காதல் கைகூடும். போட்டித்தேர்வுகளுக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிட்டும்.
(6 / 8)
துலாம்: இந்த ராசியினருக்கு வங்கிக்கணக்கில் சேமிப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சி கூடும். வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்.
(7 / 8)
மகரம்: இந்த ராசியினருக்குத் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். மாற்றியோசித்து உத்வேகமாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடந்தால் சொத்து தொடர்பான விவகாரங்களில் ஜெயம் தான்.
(8 / 8)
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்