குருபெயர்ச்சி பலன்: பண அதிர்ஷ்டம் இந்த ராசிகள் கதவை தட்டப்போகுது.. 2025-இல் மே குரு பெயர்ச்சி.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?
- Lord Guru transit: குரு பகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Guru transit: குரு பகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
மங்கள நாயகனாக நவக்கிரகங்களில் விளங்க கூடியவர். குரு பகவான் இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கான அனைத்து விதமான யோகத்தையும் கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 6)
அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு குருபகவான் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(3 / 6)
இந்நிலையில் குரு பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கிறார் இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். குரு பகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
சிம்ம ராசி: குரு பகவானின் மிதுன ராசி பயணம் உங்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும் இந்த புத்தாண்டு முதல் உங்களுக்கு யோகம் கிடைக்கப் போவதாக கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
(5 / 6)
மிதுன ராசி: குருபகவான் வருகின்ற மே மாதம் உங்கள் ராசியில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
(6 / 6)
ரிஷப ராசி: குரு பகவானின் மிதுன ராசி பயணம் உங்களுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கணித்துள்ளது. மேலும் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்