Lord Guru: குரு ரோகிணி.. நட்சத்திர கோடீஸ்வர யோகத்தை இந்த ராசிகள் பெறுகின்றார்.. யார் அந்த ராசிகள்?
Lord Guru: குரு பகவானின் ரோகிணி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான் இவர் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.
(2 / 6)
குரு பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார்.
(3 / 6)
அதேசமயம் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். குரு பகவானின் ரோகிணி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
சிம்ம ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகப்படுத்தி கொடுக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(5 / 6)
கடக ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவரவில் எந்த குறையும் இருக்காது என கூறப்படுகிறது.
(6 / 6)
ரிஷப ராசி: குரு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவும் முழுமையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து காரியங்களும் உங்களுக்கு வெற்றிகரமாக அமையும் எனக் கூறப்படுகிறது. நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்