சுக்கிரனின் வீரியமிக்க பார்வையால் ஏற்படும் மாளவிய ராஜயோகம்.. லக் அடித்து அதீத வளர்ச்சி பெறும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுக்கிரனின் வீரியமிக்க பார்வையால் ஏற்படும் மாளவிய ராஜயோகம்.. லக் அடித்து அதீத வளர்ச்சி பெறும் ராசிகள்

சுக்கிரனின் வீரியமிக்க பார்வையால் ஏற்படும் மாளவிய ராஜயோகம்.. லக் அடித்து அதீத வளர்ச்சி பெறும் ராசிகள்

Published Mar 12, 2025 02:06 PM IST Marimuthu M
Published Mar 12, 2025 02:06 PM IST

  • சுக்கிர பகவானின் எழுச்சியால் உண்டாகும் மாளவிய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள் குறித்துப் பார்ப்போம். 

ஹோலிப் பண்டிகை வரும் மார்ச் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஹோலிப் பண்டிகைக்குப் பின், சுக்கிர பகவான் தனது ராசியை மாற்றாமல், இருக்கும் ராசியிலேயே எழுச்சியுடன் செயல்படத் தொடங்குகிறார்.வேத ஜோதிடத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கும் சுக்கிர பகவான், செழிப்பு மிக்கவராக மாறுகிறார்.பிப்ரவரி மாதத்தில் தான் சுக்கிர பகவான் மீன ராசிக்கு மாற்றம் அடைந்தார். சுக்கிர பகவான் தற்போது மீன ராசியில் தான் சஞ்சரித்து வருகிறார்.மீன ராசியில் சுக்கிர பகவான் சஞ்சரிப்பதால் மாளவிய ராஜயோகம் உருவாகிறது. சுக்கிர பகவான் ஏற்கனவே பல ராசிகளுக்கு சென்று நன்மைகள் செய்துவிட்டார். ஹோலி பண்டிகைக்குப் பின், மார்ச் 23அன்று சுக்கிரமாக உக்கிரமாக எழுகிறார். சுக்கிர பகவானின் நேர்மறை உக்கிரத் தாக்கம் எந்தெந்த ராசிகளில் இருக்கும் என்று பார்ப்போம்.

(1 / 6)

ஹோலிப் பண்டிகை வரும் மார்ச் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஹோலிப் பண்டிகைக்குப் பின், சுக்கிர பகவான் தனது ராசியை மாற்றாமல், இருக்கும் ராசியிலேயே எழுச்சியுடன் செயல்படத் தொடங்குகிறார்.

வேத ஜோதிடத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கும் சுக்கிர பகவான், செழிப்பு மிக்கவராக மாறுகிறார்.

பிப்ரவரி மாதத்தில் தான் சுக்கிர பகவான் மீன ராசிக்கு மாற்றம் அடைந்தார். சுக்கிர பகவான் தற்போது மீன ராசியில் தான் சஞ்சரித்து வருகிறார்.

மீன ராசியில் சுக்கிர பகவான் சஞ்சரிப்பதால் மாளவிய ராஜயோகம் உருவாகிறது. சுக்கிர பகவான் ஏற்கனவே பல ராசிகளுக்கு சென்று நன்மைகள் செய்துவிட்டார். ஹோலி பண்டிகைக்குப் பின், மார்ச் 23அன்று சுக்கிரமாக உக்கிரமாக எழுகிறார். சுக்கிர பகவானின் நேர்மறை உக்கிரத் தாக்கம் எந்தெந்த ராசிகளில் இருக்கும் என்று பார்ப்போம்.

மாளவிய ராஜ யோகம் ஒருவருக்கு உருவானால், அந்த நபர் அழகானவராகவும், பெரிய கண்களுடன், இயற்கையில் வசீகரமானவராகவும் இருப்பர்.மேலும் இந்த மாளவிய ராஜயோகத்தினால் பிரபலமடைவர், வெற்றியாளராகவும், பல வாகனங்களின் உரிமையாளர் ஆகவும் மாறுவர். பின், ஆடம்பரமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவர்.சுக்கிர பகவான் முதல், நான்காவது, ஏழாவது மற்றும் பத்தாவது பாதங்களில் இருக்கும்போதோ, மீனத்தில் இருக்கும்போதோ மாளவிய ராஜ யோகம் உருவாகிறது.சுக்கிர பகவான் அதன் சொந்த ராசியான ரிஷபம், துலாம் ராசியில் இருப்பவர்களுக்கு சொகுசு வாழ்க்கையினையும் மகிழ்ச்சியினையும் அதிகரிக்கும்.சுக்கிர பகவான் நன்கு வீரியமாக ஆளும்போது, ஒருவருக்கு ஆளுமை நன்றாக இருக்கும். பெண்கள் அத்தகைய நபர்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.மேலும் சுக்கிர பகவான், பிரபலமாகி வெற்றியை அடைகிறார்கள்.

(2 / 6)

மாளவிய ராஜ யோகம் ஒருவருக்கு உருவானால், அந்த நபர் அழகானவராகவும், பெரிய கண்களுடன், இயற்கையில் வசீகரமானவராகவும் இருப்பர்.

மேலும் இந்த மாளவிய ராஜயோகத்தினால் பிரபலமடைவர், வெற்றியாளராகவும், பல வாகனங்களின் உரிமையாளர் ஆகவும் மாறுவர். பின், ஆடம்பரமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவர்.

சுக்கிர பகவான் முதல், நான்காவது, ஏழாவது மற்றும் பத்தாவது பாதங்களில் இருக்கும்போதோ, மீனத்தில் இருக்கும்போதோ மாளவிய ராஜ யோகம் உருவாகிறது.

சுக்கிர பகவான் அதன் சொந்த ராசியான ரிஷபம், துலாம் ராசியில் இருப்பவர்களுக்கு சொகுசு வாழ்க்கையினையும் மகிழ்ச்சியினையும் அதிகரிக்கும்.

சுக்கிர பகவான் நன்கு வீரியமாக ஆளும்போது, ஒருவருக்கு ஆளுமை நன்றாக இருக்கும். பெண்கள் அத்தகைய நபர்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.

மேலும் சுக்கிர பகவான், பிரபலமாகி வெற்றியை அடைகிறார்கள்.

மிதுனம்: மிதுன ராசிக்கு, சுக்கிர பகவானால் ஏற்படும் மாளவிய ராஜ யோகத்தால், எதிர்காலத்தில் புதிய உயரங்களை அடைவார்கள். இதுவரை நீங்கள் சந்தித்த அவமானங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி நல்ல பெயர் உண்டாகும். கோபத்தில் மட்டும் நிதானத்துடன் செயல்பட்டு, திட்டமிட்டு செயல்பட்டால், இந்த காலத்தில் மிதுன ராசியினர் அதிர்ஷ்டத்தைப் பெறுவர்.

(3 / 6)

மிதுனம்: மிதுன ராசிக்கு, சுக்கிர பகவானால் ஏற்படும் மாளவிய ராஜ யோகத்தால், எதிர்காலத்தில் புதிய உயரங்களை அடைவார்கள். இதுவரை நீங்கள் சந்தித்த அவமானங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி நல்ல பெயர் உண்டாகும். கோபத்தில் மட்டும் நிதானத்துடன் செயல்பட்டு, திட்டமிட்டு செயல்பட்டால், இந்த காலத்தில் மிதுன ராசியினர் அதிர்ஷ்டத்தைப் பெறுவர்.

தனுசு:தனுசு ராசிக்கு, சுக்கிர பகவானால் ஏற்படும் மாளவிய ராஜயோகத்தால், செல்வம் அதிகரிக்கும். தொழில் செய்யும் தனுசு ராசியினருக்கு லாபம் கூடும். கணவன் - மனைவி இடையே தாம்பத்தியம் சிறக்கும். காதலிக்கும் தனுசு ராசியினருக்கு வீட்டில் சம்மதம் கிடைத்து, திருமணம் முடிக்கும் வாய்ப்பு வரும். புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு, வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

(4 / 6)

தனுசு:

தனுசு ராசிக்கு, சுக்கிர பகவானால் ஏற்படும் மாளவிய ராஜயோகத்தால், செல்வம் அதிகரிக்கும். தொழில் செய்யும் தனுசு ராசியினருக்கு லாபம் கூடும். கணவன் - மனைவி இடையே தாம்பத்தியம் சிறக்கும். காதலிக்கும் தனுசு ராசியினருக்கு வீட்டில் சம்மதம் கிடைத்து, திருமணம் முடிக்கும் வாய்ப்பு வரும். புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு, வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்:மகர ராசிக்கு, சுக்கிர பகவானால் ஏற்படும் மாளவிய ராஜயோகத்தால், வேலையில் வெற்றி கிடைக்கும். இத்தனை நாட்களாகப் பட்ட கஷ்டம் மறைந்து ஆடம்பர வாழ்வு கிடைக்கும். மகிழ்ச்சி இல்லாமல் இருக்கும் மகர ராசியினருக்கு, வாழ்வில் இன்பம் கிட்டும். வேலையில் இருந்து வந்த அலுவலக அரசியல் குறைந்து, நீங்கள் முன்பு சாதிக்க முடியாத ஒரு வேலையினை இப்போது சிறப்பாக செய்து வெற்றி பெறுவீர்கள்.

(5 / 6)

மகரம்:

மகர ராசிக்கு, சுக்கிர பகவானால் ஏற்படும் மாளவிய ராஜயோகத்தால், வேலையில் வெற்றி கிடைக்கும். இத்தனை நாட்களாகப் பட்ட கஷ்டம் மறைந்து ஆடம்பர வாழ்வு கிடைக்கும். மகிழ்ச்சி இல்லாமல் இருக்கும் மகர ராசியினருக்கு, வாழ்வில் இன்பம் கிட்டும். வேலையில் இருந்து வந்த அலுவலக அரசியல் குறைந்து, நீங்கள் முன்பு சாதிக்க முடியாத ஒரு வேலையினை இப்போது சிறப்பாக செய்து வெற்றி பெறுவீர்கள்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

(6 / 6)

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர். முதுகலை கட்டுமானப்பொறியியல் துறையில் பட்டம்பெற்றவர். விகடனில் 2014-15க்கான தலைசிறந்த மாணவப் பத்திரிகையாளர் விருது பெற்றவர். 11ஆண்டுகளுக்கும் மேலாக அச்சு,காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் அனுபவம் கொண்டவர். தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக பள்ளியில் படிக்கும்போதே கையெழுத்துப் பிரதியில் ஆரம்பித்த இவரது ஊடகப்பயணம், தாலுகா நிருபர், விகடன், மின்னம்பலம், காவேரி நியூஸ் டிவி, நியூஸ் ஜெ டிவி, ஈடிவி பாரத் தமிழ்நாடு வரை பயணிக்கச் செய்து, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் இவரை சேர்த்துள்ளது. அனைத்து துறை சார்ந்த கட்டுரைகளையும் எழுதக்கூடியவர். சினிமாவில் இயக்கம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவது, சிறுகதை எழுதுவது மிகப்பிடித்தமான பணிகள்!

மற்ற கேலரிக்கள்