சூரிய கிரகணம் 2025: இந்த ராசிகள் வாழ்க்கை எப்படி மாறும்?.. சனி சூரிய கிரகணத்தன்று மாறுகிறார்.. என்ன நடக்கப்போகுதோ?
- Saturn Transit: சூரிய கிரகண நாளில் சனிபகவான் இடமாற்றம் செய்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் சொர்க்க வாழ்க்கையை வாழ போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Saturn Transit: சூரிய கிரகண நாளில் சனிபகவான் இடமாற்றம் செய்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் சொர்க்க வாழ்க்கையை வாழ போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
(2 / 6)
30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார். சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
(3 / 6)
அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று சனி பகவான் மீன ராசிக்கு செல்கிறார். அதே நாளில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. சூரிய கிரகண நாளில் சனிபகவான் இடமாற்றம் செய்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் சொர்க்க வாழ்க்கையை வாழ போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
கடக ராசி: சூரிய கிரகணம் சனி பெயர்ச்சி மூலம் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போவதாக கூறப்படுகிறது. குழந்தைகளால் நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
(5 / 6)
மிதுன ராசி: சூரிய கிரகணம் சனி பெயர்ச்சி மூலம் உங்களுக்கு இந்த ஆண்டு மார்ச் மாத முதல் யோகம் கிடைக்கப்போவதாக கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. அரசு துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
(6 / 6)
மேஷ ராசி: சூரிய கிரகணம் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு மதிப்பு மற்றும் மரியாதையை அதிகப்படுத்தி கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வியாபாரத்தில் அதிக அளவில் உங்களுக்கு லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்