குரு - புதன் சேர்க்கையில் உருவாகும் மத்திய யோகம்.. கெட்டது விலகி நல்லது பெறப்போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு - புதன் சேர்க்கையில் உருவாகும் மத்திய யோகம்.. கெட்டது விலகி நல்லது பெறப்போகும் ராசிகள்

குரு - புதன் சேர்க்கையில் உருவாகும் மத்திய யோகம்.. கெட்டது விலகி நல்லது பெறப்போகும் ராசிகள்

Published Mar 14, 2025 11:42 PM IST Marimuthu M
Published Mar 14, 2025 11:42 PM IST

  • குரு - புதன் சேர்க்கையில் உருவாகும் மத்திய யோகத்தால், கோடீஸ்வரர்கள் ஆகப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம். 

ஜோதிடத்தின்படி, கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. இந்த இடமாற்றம் சுபமான மற்றும் அமங்கலமான ராஜ யோகங்களை உருவாக்குகிறது. கிரக இயக்கம் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஜோதிடம் கூறுகிறது. கடந்த பிப்ரவரி 21ஆம் தேதியன்று, புதன் பகவானும் நவகிரகங்களின் இளவரசரான குரு பகவானும் நேருக்கு நேர் அமர்ந்து மிகவும் சக்திவாய்ந்த யோகத்தை உருவாக்கினர். இது மத்திய யோகம் என்றழைக்கப்படுகிறது.

(1 / 6)

இந்த மத்திய யோகம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது என்று நம்பப்படுகிறது. அது என்ன ராசி என்பதைக் கீழே பார்க்கலாம்.

(2 / 6)

மேஷம்:மேஷ ராசியினருக்கு இந்த மத்திய யோகத்தால், வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். ஏற்கனவே, செய்த முதலீடுகள் உங்களுக்கு நல்ல வருமானத்தைத் தரும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு உண்டாகும்.புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்குச் சாதகமாக முடிவடையும். பங்குச் சந்தை முதலீடுகள் உங்களுக்கு அமோக லாபத்தைத் தரும். திருமண தொடர்பான நன்மைகள் கிடைக்கும். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் இருந்த அனைத்துப் பிரச்னைகளும் குறையும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

(3 / 6)

மேஷம்:

மேஷ ராசியினருக்கு இந்த மத்திய யோகத்தால், வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். ஏற்கனவே, செய்த முதலீடுகள் உங்களுக்கு நல்ல வருமானத்தைத் தரும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு உண்டாகும்.

புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்குச் சாதகமாக முடிவடையும். பங்குச் சந்தை முதலீடுகள் உங்களுக்கு அமோக லாபத்தைத் தரும். திருமண தொடர்பான நன்மைகள் கிடைக்கும். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் இருந்த அனைத்துப் பிரச்னைகளும் குறையும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்: மத்திய யோகம், மகர ராசியினருக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் அதிகரிக்கும். வெகுநாட்களாக நினைத்த நீண்டகால ஆசைகளும் நிறைவேறும். கடின உழைப்பு நல்ல பலனைத் தரும். நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபம், பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்கு நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தைப் பெறலாம்.

(4 / 6)

துலாம்:துலாம் ராசியில் உருவாகும் மத்திய யோகம், உங்களுக்கு நல்ல நேரத்தைத் தரும் என்று ஜோதிடம் கூறுகிறது. நீண்ட நாட்களாக தேங்கிக் கிடந்த பணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். எதிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமான தம்பதிகளுக்கிடையேயான அன்பு அதிகரிக்கும். நிதி நிலைமை பெரிதும் மேம்படும். பண விரயம் குறையும். ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் இதுவரை சந்தித்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். மன அழுத்தம் குறையும். ஆரோக்கியம் மேம்படும்.

(5 / 6)

துலாம்:

துலாம் ராசியில் உருவாகும் மத்திய யோகம், உங்களுக்கு நல்ல நேரத்தைத் தரும் என்று ஜோதிடம் கூறுகிறது. நீண்ட நாட்களாக தேங்கிக் கிடந்த பணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். எதிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமான தம்பதிகளுக்கிடையேயான அன்பு அதிகரிக்கும். நிதி நிலைமை பெரிதும் மேம்படும். பண விரயம் குறையும். ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் இதுவரை சந்தித்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். மன அழுத்தம் குறையும். ஆரோக்கியம் மேம்படும்.

பொறுப்புத்துறப்பு - இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

(6 / 6)

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.

மற்ற கேலரிக்கள்