Chandramangala Yoga: சிவராத்திரியின்போது உண்டான சந்திரமங்கள யோகம்.. வெற்றிபெறப் போகும் ராசிகள்!
- சிவராத்திரியின்போது உண்டாகும் புதுயோகத்தால் நன்மைபெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
- சிவராத்திரியின்போது உண்டாகும் புதுயோகத்தால் நன்மைபெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
(1 / 6)
மாசி மாதத்தின் கிருஷ்ண பட்ச சதுர்தசி திதியில் , மகா சிவராத்திரி நாள் வருகிறது. வரும் மார்ச் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி வருகிறது. இக்காலகட்டத்தில் 300 ஆண்டுகளுக்குப்பின் சில அதிர்ஷ்ட யோகங்கள் உண்டாகின்றன. அதாவது மகர ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரன் இணைவால், சந்திர மங்களயோகம் ஏற்படுகிறது. இந்த அதிர்ஷ்ட யோகத்தால் நன்மைபெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
(2 / 6)
மேஷம்: இந்த ராசியினருக்கு சிவபெருமானின் ஆசியால், நிதி தொடர்பாக, மன நிம்மதி தொடர்பாகவும் நன்மைகள் உண்டாகும். உங்களின் இடைவிடாத உழைப்புக்கு வெற்றி கிடைத்தே தீரும். ஆளுமைத்திறனால் பிரச்னைகளை முறியடிப்பீர்கள். உடல்நலம் மேம்படும்.
(3 / 6)
மிதுனம்: இந்த ராசியினருக்கு சிவபெருமானின் ஆசியால், செய்யும் தொழிலில் வளர்ச்சி கிடைக்கும். எதிர்காலத்தேவைக்குண்டான வளர்ச்சி கிடைக்கும். சொந்த பந்தங்களிடம் இருந்து அன்பு பெருகும். நெடுநாளாக நினைத்தப் பொருட்களை வாங்குவீர்கள்.
(4 / 6)
சிம்மம்: இந்த ராசியினருக்கு சிவபெருமானின் ஆசியால், நிறைய வருவாய் ஆதாரங்கள் உண்டாகும். பார்ட்னர்களால் நன்மை கிடைக்கும்.
கடனை அடைப்பீர்கள். புதிய வீட்டடி மனை, வாகனம் ஆகியவை வாங்க வாய்ப்புள்ளது. கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
(5 / 6)
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.
மற்ற கேலரிக்கள்