Gajalakshmi Yoga: 12ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் கஜலட்சுமி யோகம்.. பணமழையில் நனையப்போகும் ராசிகள்
- வரும் மே 1ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசிக்கு குடிபுகப்போகிறார். அதேபோல், மே 19ஆம் தேதி, ரிஷப ராசியில் சஞ்சரிக்கப்போகிறார், சுக்கிர பகவான். இந்த பகவான் செல்வச்செழிப்பினைத் தரக்கூடியவர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ரிஷப ராசியில் குரு மற்றும் சுக்கிரன் பெயர்ச்சி ஆவதால், கஜலட்சுமி யோகம் உண்டாகப்போகிறது.
- வரும் மே 1ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசிக்கு குடிபுகப்போகிறார். அதேபோல், மே 19ஆம் தேதி, ரிஷப ராசியில் சஞ்சரிக்கப்போகிறார், சுக்கிர பகவான். இந்த பகவான் செல்வச்செழிப்பினைத் தரக்கூடியவர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ரிஷப ராசியில் குரு மற்றும் சுக்கிரன் பெயர்ச்சி ஆவதால், கஜலட்சுமி யோகம் உண்டாகப்போகிறது.
(1 / 6)
மேலும் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் இந்த கஜலட்சுமி யோகம் ஏற்படுகிறது. ஆகையால், தொழில் மற்றும் நிதி மேலாண்மையில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
(2 / 6)
மேஷம்: இந்த ராசியினருக்கு கஜலட்சுமி ராஜயோகத்தால், மந்தமாக இருக்கும் வியாபாரம் சுறுசுறுப்பாகி நடக்கும். இக்கால கட்டத்தில் நன்மை, தீமைகளை ஆராய்ந்து எடுக்கும் முடிவுகளின் மூலம் வெற்றி வாகை சூடுவீர்கள். பொருளாதாரத்தில் படிப்படியான வளர்ச்சி கிடைக்கும். இறைநம்பிக்கை அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் கூடும்.
(3 / 6)
கடகம்: இந்த ராசியினருக்கு கஜலட்சுமி ராஜயோகத்தால், இத்தனை நாட்களாக கிடைக்காமல் இருந்த பணம் கைவந்து சேரும். செய்யும் தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவர். அதனால் வருவாய் அதிகரிக்கும். சேமிப்பும் பெருகும். புதிதாக சைடு பிசினஸ் தொடங்கினால் வாழ்வில் முன்னேற்றத்தைப் பெறலாம்.
(4 / 6)
சிம்மம்: இந்த ராசியினருக்கு கஜலட்சுமி ராஜயோகத்தால், தைரியம் பிறக்கும். இறைப் பணிகளை செய்வீர்கள். தொழில் முனைவோர், சிறு வியாபாரிகள் வாழ்வில் தொழில் ரீதியிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வீட்டடி மனை, இருசக்கர வாகனங்களை வாங்கும் சூழல் உண்டாகும்.
(5 / 6)
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.
மற்ற கேலரிக்கள்