Transit Of Mars: மேஷத்தில் பொங்கல் வைக்கும் செவ்வாய்.. பணம் கொட்டப்போகும் ராசிகள்.. உங்கள் ராசி இதில் இருக்கா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Transit Of Mars: மேஷத்தில் பொங்கல் வைக்கும் செவ்வாய்.. பணம் கொட்டப்போகும் ராசிகள்.. உங்கள் ராசி இதில் இருக்கா?

Transit Of Mars: மேஷத்தில் பொங்கல் வைக்கும் செவ்வாய்.. பணம் கொட்டப்போகும் ராசிகள்.. உங்கள் ராசி இதில் இருக்கா?

Published Jun 10, 2024 10:54 AM IST Marimuthu M
Published Jun 10, 2024 10:54 AM IST

  • Transit Of Mars: மேஷத்தில் செவ்வாய் புலம்பெயர்ந்ததால் புதையலைத் தட்டித் தூக்கப் போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Transit of Mars: நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு நகர்கின்றன. இதனை ஜோதிடத்தில் ‘கிரகப்பெயர்ச்சி’ என்பர். கிரகங்களின் பெயர்ச்சியைத் தாண்டி, அவை பின்னால் பெயர்வது, ராசியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், அது சார்ந்த விளைவுகள் நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை உண்டாக்கும்.

(1 / 6)

Transit of Mars: நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு நகர்கின்றன. இதனை ஜோதிடத்தில் ‘கிரகப்பெயர்ச்சி’ என்பர். 

கிரகங்களின் பெயர்ச்சியைத் தாண்டி, அவை பின்னால் பெயர்வது, ராசியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், அது சார்ந்த விளைவுகள் நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை உண்டாக்கும்.

மே 2024-ல் கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் இணைவுகள் காரணமாக, மக்களின் வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளை சரிசெய்ய சாதகமான காலமாக இருக்கும். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக இருப்பவர், செவ்வாய். இவர் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.தைரியத்தையும் கம்பீரத்தினையும் தரும் செவ்வாய் பகவான், மீன ராசியில் இருந்து ஜூன் 1ஆம் தேதி முதல் மேஷத்தில் குடியேறியுள்ளார். இது ஒரு ஆண்டுக்குப் பின் நடக்கிறது.செவ்வாய் பெயர்ச்சியால் வாழ்வில் பொருளாதாரத்தில் முன்னேற்றமும் கம்பீரமும் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

(2 / 6)

மே 2024-ல் கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் இணைவுகள் காரணமாக, மக்களின் வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளை சரிசெய்ய சாதகமான காலமாக இருக்கும். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக இருப்பவர், செவ்வாய். இவர் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

தைரியத்தையும் கம்பீரத்தினையும் தரும் செவ்வாய் பகவான், மீன ராசியில் இருந்து ஜூன் 1ஆம் தேதி முதல் மேஷத்தில் குடியேறியுள்ளார். இது ஒரு ஆண்டுக்குப் பின் நடக்கிறது.

செவ்வாய் பெயர்ச்சியால் வாழ்வில் பொருளாதாரத்தில் முன்னேற்றமும் கம்பீரமும் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

மேஷம்:மேஷ ராசியில் தான் செவ்வாய் பெயர்ச்சி ஆகிறார். இது செவ்வாய்க்கு முதல் வீடு. ஆகையால், இந்த ராசியினர் எக்கச்சக்க நிதியைப் பெறுவார்கள். வருவாய் முன்பைவிட அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னை தீரும். கம்பீரமும் மிடுக்கும் கூடும். ஒரு விஷயம் நடக்காமல் இருந்தாலும் நடத்திக் காட்டுவீர்கள். வரன் பார்க்கும் மேஷ ராசியினருக்கு மனம்போல் மாங்கல்யம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் அனுகூலமாக முடியும்.

(3 / 6)

மேஷம்:

மேஷ ராசியில் தான் செவ்வாய் பெயர்ச்சி ஆகிறார். இது செவ்வாய்க்கு முதல் வீடு. ஆகையால், இந்த ராசியினர் எக்கச்சக்க நிதியைப் பெறுவார்கள். வருவாய் முன்பைவிட அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னை தீரும். கம்பீரமும் மிடுக்கும் கூடும். ஒரு விஷயம் நடக்காமல் இருந்தாலும் நடத்திக் காட்டுவீர்கள். வரன் பார்க்கும் மேஷ ராசியினருக்கு மனம்போல் மாங்கல்யம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மகரம்:இந்த ராசியினருக்கு செவ்வாய் 4ஆம் இல்லத்தில் இருக்கிறார். இதனால் வரக்கூடிய ஜூன் முதல், மகர ராசியினரின் செல்வாக்கு கூடும். நடந்து செல்லும் நபருக்கு வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வாடகை வீட்டில் இருந்தால் வீட்டடி மனை வாங்குவீர்கள். கெட்டப் பெயர்கள் நீங்கும். தரகு, வைத்தியம், ஹோட்டல் தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் கிட்டும். அம்மாவின் உடல்நலம் சீராகி ஆனந்தம்பெருகும். சொந்த ஊரில் இருந்து நல்ல தகவல் வரும். பாட்டி - தாத்தாக்களின் உடைமைகள் கிடைக்கலாம்.

(4 / 6)

மகரம்:

இந்த ராசியினருக்கு செவ்வாய் 4ஆம் இல்லத்தில் இருக்கிறார். இதனால் வரக்கூடிய ஜூன் முதல், மகர ராசியினரின் செல்வாக்கு கூடும். நடந்து செல்லும் நபருக்கு வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வாடகை வீட்டில் இருந்தால் வீட்டடி மனை வாங்குவீர்கள். கெட்டப் பெயர்கள் நீங்கும். தரகு, வைத்தியம், ஹோட்டல் தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் கிட்டும். அம்மாவின் உடல்நலம் சீராகி ஆனந்தம்பெருகும். சொந்த ஊரில் இருந்து நல்ல தகவல் வரும். பாட்டி - தாத்தாக்களின் உடைமைகள் கிடைக்கலாம்.

சிம்மம்:இந்த ராசியின் 9ஆம் இல்லத்தில் செவ்வாய் உள்ளார். ஜூன் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து செவ்வாய் பெயர்ச்சியால் ஆரோக்கியமான நிலை உண்டாகும். தொழில்முனைவோராக இருந்தால் வெளிமாநிலங்கள் சென்று ஆர்டர்களைப் பிடிப்பீர்கள். எதையும் நன்கு பிளான் செய்து செய்யவும். அரசின் பணியிடங்களுக்கு முயற்சி செய்தால் இந்த காலத்தில் பாஸிட்டிவ் ஆன செய்தி வந்துசேரும். செவ்வாய் சிம்ம ராசியினருக்கு மிடுக்கினை தருகிறார். தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு, அலுவலக அரசியல் குறையும். உயர்ந்த இடத்தை நோக்கி நகரும் வாய்ப்பு உருவாகும்.

(5 / 6)

சிம்மம்:

இந்த ராசியின் 9ஆம் இல்லத்தில் செவ்வாய் உள்ளார். ஜூன் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து செவ்வாய் பெயர்ச்சியால் ஆரோக்கியமான நிலை உண்டாகும். தொழில்முனைவோராக இருந்தால் வெளிமாநிலங்கள் சென்று ஆர்டர்களைப் பிடிப்பீர்கள். எதையும் நன்கு பிளான் செய்து செய்யவும். அரசின் பணியிடங்களுக்கு முயற்சி செய்தால் இந்த காலத்தில் பாஸிட்டிவ் ஆன செய்தி வந்துசேரும். செவ்வாய் சிம்ம ராசியினருக்கு மிடுக்கினை தருகிறார். தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு, அலுவலக அரசியல் குறையும். உயர்ந்த இடத்தை நோக்கி நகரும் வாய்ப்பு உருவாகும்.

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

(6 / 6)

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

மற்ற கேலரிக்கள்