சனி பெயர்ச்சி பலன்: சனி வீட்டின் முன் நிற்கிறார்.. சொர்க்க வாசலை திறக்கப் போகும் ராசிகள்.. யாருக்கு யோகம்?
- Lord Sani: சனிபகவானின் இந்த நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Sani: சனிபகவானின் இந்த நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் அவரைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
(2 / 6)
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகின்றார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(3 / 6)
அந்த வகையில் சனிபகவான் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி என்று பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் நுழைந்தார். சனிபகவானின் இந்த நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
துலாம் ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு மதிப்பு மற்றும் மரியாதையை அதிகப்படுத்தி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்துறையில் உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயர் கல்வியில் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள் என கூறப்படுகிறது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
(5 / 6)
மேஷ ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல நேரமாக அமையப் போவதாக கூறப்படுகிறது. வாழ்க்கை துணையால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணத்தை சேமிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(6 / 6)
கடக ராசி: சனி பகவானின் நட்சத்திர இடம் மற்றும் உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவரவு உங்களுக்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தொழிலில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்