Ketu Transit 2025: அந்த ராசிகளே தான்.. கேது பெயர்ச்சி.. அசுப கிரகம் தரும் யோக பலன்களை பெறும் ராசிகள்!
- Lord Ketu: கேது பகவானின் சிம்ம ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் யோகத்தை பெறப்போவதாக கணிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Ketu: கேது பகவானின் சிம்ம ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் யோகத்தை பெறப்போவதாக கணிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் நிழல் கிரகங்களாக விளங்க கூடியவர்கள். ராகு மற்றும் கேது இவர்கள் இருவரும் ஒரே மாதிரி பயணம் செய்யக்கூடியவர்கள். வெவ்வேறு ராசிகளில் இவர்கள் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு மற்றும் கேது விளங்கி வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
(2 / 6)
அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் தங்களது பயணத்தை தொடங்கினார்கள். இந்த 2025 ஆம் ஆண்டு தங்களது இடத்தை மாற்றுகின்றன. இந்நிலையில் ராகு மற்றும் கேது இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் தங்களது ராசி மாற்றத்தை செய்ய உள்ளனர்.
(3 / 6)
அந்த வகையில் ராகு பகவான் கும்ப ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசிக்கும் இடமாற்றம் செய்யப் போகின்றன. கேது பகவானின் சிம்ம ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் யோகத்தை பெறப்போவதாக கணிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது பகவான் பயணத்தை தொடங்கப் போகிறார். இதனால் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட கூடும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(5 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் கேது பகவான் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்ட காலம் தேடி வரும் என கூறப்படுகிறது. வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. வங்கி சேமிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது.
(6 / 6)
மீன ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் முதல் யோகம் கிடைக்கப் போவதாக கூறப்படுகிறது. அடுத்த 18 மாதங்கள் உங்களுக்கு வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்