Marriage: காதலர் தினத்துக்குப் பின் திருமணம் கைகூடப்போகும் ராசிகள்
- இன்னும் திருமணம் ஆகாமல் எத்தனையோ 90’ஸ் கிட்ஸ்கள் திருமணம் ஆகாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். சிலருக்கு, திருமணம் மேடை வரை போய், நின்று போயிருக்கலாம்.
- இன்னும் திருமணம் ஆகாமல் எத்தனையோ 90’ஸ் கிட்ஸ்கள் திருமணம் ஆகாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். சிலருக்கு, திருமணம் மேடை வரை போய், நின்று போயிருக்கலாம்.
(1 / 7)
இந்நிலையில் காதலர் தினத்துக்குப் பின், சில ராசியினருக்கு திருமணத்தடைகள் நீங்கும். அப்படி எந்தெந்த ராசிகள் திருமணப் பந்தத்தில் இணையப்போகின்றன என்பது குறித்துப் பார்ப்போம்.
(2 / 7)
மிதுனம்: இந்த ராசியினருக்கு, பிப்ரவரி மாதத்துக்குப் பின், கல்யாணயோகம் உண்டாகவுள்ளது. இக்கால கட்டத்தில் குருபகவானின் அனுகிரகத்தால் பிடித்த நபரை சந்தோஷத்துடன் மனம் முடிப்பர். காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, பெற்றோரின் ஆசியோடு, திருமணம் நடக்கும்.
(3 / 7)
சிம்மம்: இந்த ராசியினருக்கு, இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் திருமணவாய்ப்புகள் பற்றிய பேச்சு அடிபட்டு நல்ல வாழ்வு வாய்க்கும். உங்களுக்கு ஏற்ற, உங்கள் குணநலத்துடன் ஒத்த நபருடன் திருமணம் நடக்கவாய்ப்புள்ளது.
(4 / 7)
துலாம்: இந்த ராசியினருக்கு, இந்தாண்டின் ஏழாம் வீட்டில் இருந்து வியாழத் திசை ஆரம்பமாகிறது. ஆண்டின் முதல் பாதி கல்யாணப் பேச்சுகள், வரன் பார்க்கும் வைபவங்கள், பொருத்தமான ஜாதகங்கள் வந்துசேரும். இக்காலகட்டத்தில் வாழ்வின் முன்னேற்றமும் நல்ல முறையில் இருக்கும்.
(5 / 7)
விருச்சிகம்: இந்த ராசியினருக்கு, ஜூலை மாதம் முதல் திருமண வாய்ப்புகள் வந்துசேரும். 2024ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி குரு பகவான், ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதால், வாழ்வில் திருமணயோகம் வரும்.
(Freepik)(6 / 7)
மகரம்: 2024ஆம் ஆண்டு மகர ராசியினருக்கு, ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் கல்யாணம் நடக்கவாய்ப்புள்ளது. அதேபோல், சிங்கிளாக இருப்பவர்கள், மார்ச் முதல் ஏப்ரல் வரையிலும், மே முதல் ஜூன் வரையிலான காலகட்டத்திலும் காதல் கைகூட வாய்ப்புள்ளது.
(7 / 7)
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்