தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Venus: மிதுனத்தில் சவாரி செய்யும் சுக்கிரன்.. தரித்திரம் நீங்கி சரித்திரத்தில் இடம்பெறும் ராசிகள்

Lord Venus: மிதுனத்தில் சவாரி செய்யும் சுக்கிரன்.. தரித்திரம் நீங்கி சரித்திரத்தில் இடம்பெறும் ராசிகள்

Jun 14, 2024 09:18 PM IST Marimuthu M
Jun 14, 2024 09:18 PM , IST

  • Lord Venus: மிதுன ராசியைக் கட்டியணைக்கும் சுக்கிர பகவானால் பணமூட்டையில் தடுக்கிவிழப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Sukran: ஜோதிடத்தின்படி, நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு நகர்கின்றன. இதனை ஜோதிடத்தில் ‘கிரகப்பெயர்ச்சி’ என்பர்.கிரகங்களின் பெயர்ச்சியைத் தாண்டி, அவை பின்னால் பெயர்வது, ராசியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், அது சார்ந்த விளைவுகள் நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை உண்டாக்கும்.

(1 / 6)

அப்படி, சுக்கிர பகவான், இன்னும் சில நாட்களில் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். சுக்கிர பகவான், பணம், திறமையான பேச்சு, குடும்பத்தில் திருமண வாழ்வு, புத்தி ஆகியவற்றின் காரணகர்த்தாவாகவுள்ளார். மிதுன ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி குடியேறுவதால் அதிர்ஷ்டம் பெறும் நன்மைகள் குறித்து அறிந்துகொள்வோம்.

(2 / 6)

மேஷம்: மேஷ ராசியினர் சுக்கிரனின் பெயர்ச்சியால், அதிக லாபத்தை ஈட்டப்போகிறார்கள். இந்த காலத்தில் வீட்டில் சண்டையிட்டு பிரிந்து சென்ற அண்ணன் - தம்பிகள் ஒன்றுசேர்வார்கள்.உங்கள் வாழ்க்கைத் துணையுடன், அன்புடனும் மரியாதையுடனும் நடந்துகொள்வீர்கள். சுக்கிர பகவானின் கருணையினால், நீண்ட காலமாக தொழிலில் கிடைக்காமல் இருந்த டெண்டர்கள் கிடைக்கும். வருவாய்க்கான புத்தம் புது ஐடியாக்கள் கிடைக்கும். அதைச் சரியாகத்திட்டமிட்டு செயல்படுத்தினால் வெற்றி பெறலாம். ஒரு விஷயம் நடக்காமல் இருந்தாலும் சவால்விட்டு நடத்திக் காட்டுவீர்கள். வரன் பார்க்கும் மேஷ ராசியினருக்கு மனம்போல் மாங்கல்யம் உண்டாகும்.

(3 / 6)

மிதுனம்:மிதுன ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சியால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கவுள்ளன. இத்தனை நாட்களாக வாயைக் கொடுத்து எதிரிகள் பலரைச் சம்பாதித்து வைத்து மிதுன ராசியினருக்கு, சாந்தமாகி, பொறுமை அதிகரிக்கும் காலம் இதுவாகும். இந்த காலத்தில் உங்களது அணுகுமுறை மாற்றத்தால், பணியிடத்தில் வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்களது பணிகளில் இருந்த அயற்சி நீங்கும்; தொய்வு மறையும். திருமணத்திற்கு வரன் அமையாத மிதுன ராசியினருக்கு நல்ல குடும்பத்தில் இருந்து வரன்கள் அமையும். உங்கள் இலக்குகளை அடைய இந்த நேரம் சிறந்தது.

(4 / 6)

தனுசு:தனுசு ராசியினருக்கு சுக்கிரனின் பெயர்ச்சியால் கெட்டது விலகி, பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் சமூகத்தில் சீர்கெட்டுப் போயிருந்த உங்களது பெயர் சரியாகும். நீண்ட காலமாக நடக்காமல் இருந்த பணிகள் சரியாகும். எதிரிகளாய் மாறிப்போன சுற்றமும் நட்பும் உங்களது நல்ல மனதைப் புரிந்துகொண்டு, பாசத்தைக் கூட்டுவார்கள். சண்டை சச்சரவுகளோடு இருந்த கணவன் - மனைவி மீண்டும் புரிந்து மன நிம்மதியுடன் வாழ்வார்கள். இந்த காலகட்டத்தில் அனைவரிடமும் அன்புடனும் மனிதநேயத்துடனும் நடந்துகொண்டு, ஜெயிப்பீர்கள். பிசினஸில் ஜெயிக்கப் போராடிக்கொண்டு இருந்தால், வங்கியில் கடன் கிடைக்கும்.

(5 / 6)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்