Careful: 2024ஆம் ஆண்டில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Careful: 2024ஆம் ஆண்டில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய ராசிகள்

Careful: 2024ஆம் ஆண்டில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய ராசிகள்

Jan 03, 2024 06:15 AM IST Marimuthu M
Jan 03, 2024 06:15 AM , IST

  • 2024ஆம் ஆண்டில் கிரக மாற்றங்களால் சில ராசியினர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்படி எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம். 

(1 / 6)

அப்படி எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம். 

ரிஷபம்: இந்த புத்தாண்டில் உண்டாகும் கோசார மாற்றத்தால் உங்கள் உழைப்பிற்குப் பலன் நிச்சயம் கிடைக்கும். அதேநேரம், திட்டமிட்டு உரிய நேரத்துடன் செய்வது நன்மையைத் தரும். பணியில் டிரான்ஸ்ஃபர் வந்தால் ஏற்பது புத்திசாலித்தனம். இல்லையென்றால் கிடைப்பதும் கிடைக்காத சூழல் உண்டாகும். உங்கள் கவலைகளைப் பற்றி முனங்கிக்கொண்டே இருக்கவேண்டாம். இவ்வாண்டு செயல்களில் கவனம் தேவைப்படும் ஆண்டாகும். எம்பெருமான் பெருமாளை வழிபட பிரச்னைகள் நீங்கும். 

(2 / 6)

சிம்மம்: இந்தப் புத்தாண்டின் கிரக மாற்றத்தின் அடிப்படையில் தைரியமும் பணியில் ஈடுபாடும் அதிகரிக்கும் ஆண்டாகும். திட்டமிடாமல் செய்யும் அனைத்தும் தோல்வியையே சந்திக்கும். உயர் அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்தால் தொழில் ரீதியாக பின்னடைவு உண்டாகலாம். எனவே, எச்சரிக்கை தேவை. அனைத்து செயல்களிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. துர்கை வழிபாடு துயர் நீக்கும். 

(3 / 6)

விருச்சிகம்: இந்தப் புத்தாண்டின் கிரக மாற்றத்தால் உயர்வு கிடைத்தாலும் சோம்பேறித்தனமாக இருந்தால் எல்லாமே தோல்வி முகமாகலாம். தயவுசெய்து உங்களது ஆணவம், சுயதிமிர் ஆகியவற்றைத் தவிர்த்து நடப்பது நல்லது. இல்லையென்றால் வாழ்க்கையில் அடிமேல் அடிவிழும். ஒருவார்த்தைப் பேசும் முன் பலமுறை யோசித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். யாரைப் பற்றியும் விமர்சனங்களை முன்வைக்காதீர்கள். மற்றவரின் குறைகளைப் பெரிதுபடுத்தினால் மிகப்பெரிய பகை உண்டாகும். இல்லறத்துணையுடன் அனுசரித்துச் செல்லவில்லையென்றால் அது நிரந்தரப்பிரிவில் கொண்டுபோய்விட்டுவிடும். யாரைப் பற்றியும் யாரிடமுடம் புறணிபேசாதீர்கள். அது உங்களுக்கான ஆப்பினை நீங்களே தயார் செய்கிறீர்கள் என்று அர்த்தம். எம்பெருமான் பழனி முருகனை வேண்டி வழிபடுவது சிக்கல்களை நிவர்த்தி செய்யும். 

(4 / 6)

விருச்சிகம்: இந்தப் புத்தாண்டின் கிரக மாற்றத்தால் உயர்வு கிடைத்தாலும் சோம்பேறித்தனமாக இருந்தால் எல்லாமே தோல்வி முகமாகலாம். தயவுசெய்து உங்களது ஆணவம், சுயதிமிர் ஆகியவற்றைத் தவிர்த்து நடப்பது நல்லது. இல்லையென்றால் வாழ்க்கையில் அடிமேல் அடிவிழும். ஒருவார்த்தைப் பேசும் முன் பலமுறை யோசித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். யாரைப் பற்றியும் விமர்சனங்களை முன்வைக்காதீர்கள். மற்றவரின் குறைகளைப் பெரிதுபடுத்தினால் மிகப்பெரிய பகை உண்டாகும். இல்லறத்துணையுடன் அனுசரித்துச் செல்லவில்லையென்றால் அது நிரந்தரப்பிரிவில் கொண்டுபோய்விட்டுவிடும். யாரைப் பற்றியும் யாரிடமுடம் புறணிபேசாதீர்கள். அது உங்களுக்கான ஆப்பினை நீங்களே தயார் செய்கிறீர்கள் என்று அர்த்தம். எம்பெருமான் பழனி முருகனை வேண்டி வழிபடுவது சிக்கல்களை நிவர்த்தி செய்யும். (Freepik)

கும்பம்: இந்த ஆண்டு கும்ப ராசிக்குப் பல உயர்வுகள் கிடைக்கும் உன்னதமான ஆண்டாகும். இருப்பினும், ஜன்ம ராசியில் வீற்றிருக்கும் சனியால் உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. நீண்டநாட்களாக கிடைக்காமல் இருந்த பணப்பலன்கள் கிடைக்கும். நண்பர்கள், பணியிடத்தில் பணிபுரிபவர்கள், இல்லறத்துணையின் தனிப்பட்ட விஷயங்களிலோ அல்லது அவர்களது குடும்ப விஷயத்திலோ மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. யாரையும் மனம் நோகும்படி நடந்துகொள்ளக்கூடாது. எதிர் பாலினத்திடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இல்லையென்றால் கெட்டப்பெயரால் சீரழிவார்கள். யாரையும் எளிதில் நம்பாதீர்கள். திருப்பதி ஏழுமலையானைக் கும்பிடுவது நன்மை பயக்கும். 

(5 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்